For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவாக்சினுக்கு ஒப்புதல் அளித்தது ஆபத்தை ஏற்படுத்துமா.. அதெல்லாம் பொய்.. மத்திய அமைச்சர் விளக்கம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது கவலைக்குரிய விஷயம் என சமூகவலைதளங்களில் பரவி வரும் கருத்து தவறானது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இந்திய அரசு நேற்றைய தினம் அனுமதி அளித்தது.

Fact Check: Should we be worried about approval of Covaxin?

இந்த இரு மருந்துகளும் முழுமையாக இன்னமும் சோதனை ஓட்டம் நடத்தப்படாத நிலையில் இவற்றை பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் உள்ளதாக சமூகவலைதளங்களில் கருத்துகள் வைரலாகி வருகிறது.

தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை குறித்து சமூகவலைதளங்களில் பரவி வரும் கருத்துகள் தவறானது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் கோவாக்சின் மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது முற்றிலும் மாறுபட்டது. அது போல் கோவிஷீல்டிலிருந்து கோவாக்சினுக்கு அளித்த ஒப்புதலுக்கு மாறுபட்டது. ஏனெனில் அவை மருத்துவமனைகளில் மட்டுமே சோதனை அடிப்படையில் போடப்படுகிறது.

கோவாக்சின் போடப்படும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றார்.

Fact Check

வெளியான செய்தி

பாரத் பயோடெக்கின் கோவிட் தடுப்பு மருந்தான கோவாக்சின் பாதுகாப்பற்றது

முடிவு

கோவாக்சினுக்கு ஒப்புதல் அளித்தது கோவிஷீல்டிற்கு அளித்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கோவாக்சின் மருத்துவமனையில் சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact check: Should we be worried over rushed approval of Bharat Biotech's covaxin?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X