For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact Check: வோட்கா குடித்தால் கொரோனா ஓடிப்போகுமாம்.. வைரலாக சுற்றும் மெசேஜ்.. நம்பாதீங்க மக்களே

Google Oneindia Tamil News

சென்னை: புகழ்பெற்ற அமெரிக்க மருத்துவமனை, கொரோனாவை குணப்படுத்த வோட்கா குடிக்கச் சொல்வது போல ஒரு கடிதம் மீண்டும் வைரலாக சுற்றி வருகிறது.

அமெரிக்காவின் செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை சார்பில் இப்படி ஒரு கடிதம் வெளியானதாக, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. மது அருந்துவது, குறிப்பாக ஓட்கா குடிப்பது கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று கூறி அது சுற்றி வருகிறது.

Fact check: Vodka wont prevent COVID-19

இதேபோன்ற கடிதம் மார்ச் மாதத்திலும், ஒருமுறை, சமூக வலைத்தளங்களில், சுற்றி வந்தது. ஆனால், இதுபோன்ற எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

"ஆல்கஹால் குடிப்பதால் கோவிட் -19 இன் அபாயத்தை குறைக்க முடியும் என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது உண்மை இல்லை." என்று மருத்துவமனையின் ஒரு பதிவு தெரிவிக்கிறது.

உண்மையில், ஆல்கஹால் உங்கள் சுவாச பாதைகளில் நோயெதிர்ப்பு காரணிகளை பாதிக்கும், இது சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் நுரையீரலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கிறது.

அடுத்த தேர்தல் யுக்திக்கு தயாரான சசிகலா புஷ்பா...பரபரப்பான போஸ்டர்!!அடுத்த தேர்தல் யுக்திக்கு தயாரான சசிகலா புஷ்பா...பரபரப்பான போஸ்டர்!!

ஆல்கஹால், வைரஸ் தொற்றுநோய்களுடன் போராடும் வெள்ளை ரத்த அணு மேக்ரோபேஜ்களின் செயல்பாட்டை பாதிக்கிறது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் கொரோனாவை தடுக்க கை சானிட்டைசர்களில் ஆல்கஹால் சேர்ப்பதை மட்டுமே பரிந்துரைக்கிறது. கைகளை சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரில் 20 விநாடிகள் கழுவ வேண்டும் என்றும் அது கூறுகிறது. மற்றபடி ஆல்கஹாலை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

English summary
A letter from a famous US hospital, St Lukes has re-surfaced again, claiming that drinking alcohol, especially Vodka can help reduce the risk of getting COVID-19. A similar letter had done the rounds in March, during the peak of the outbreak. However, this was debunked by the hospital in March itself. The hospital said that it had not released any such letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X