For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை முதல் மும்பை முழுக்க ராணுவ கட்டுப்பாட்டில் வர உள்ளதாக தீயாக பரவும் போலி செய்தி

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை நகரம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு, லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும், என்று வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், இது போலியான தகவல் என்று தெரியவந்துள்ளது.

முழு மும்பையும், ராணுவ கட்டுப்பாட்டின்கீழ் வரப்போகிறது என்றும், சனிக்கிழமை முதல் 10 நாட்களுக்கு தயவுசெய்து எல்லா பொருட்களையும் வாங்கி சேமிக்கவும் என்றும் அந்த வாட்ஸ்அப் மெசேஜ் சுற்றி வருகிறது.

Fake: Army not being deployed in Mumbai to enforce lockdown

பால் மற்றும் மருந்து மட்டுமே கிடைக்கும் என்றும் வாட்ஸ்அப் செய்தி கூறுகிறது. இது ஒரு போலி செய்தி. மும்பை நகரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க ராணுவம் அல்லது கடற்படை வீரர்கள் நிறுத்தப்படவில்லை. இது ஒரு போலி செய்தி. தயவுசெய்து அதை அனுப்பவோ அல்லது நம்பவோ வேண்டாம்.

இதற்கிடையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை அளித்த பேட்டியில், மே இறுதி வரை லாக்டவுன் மகாராஷ்டிராவில் நீட்டிக்கப்படக் கூடும் என்று தெரிவித்தார்.

நல்ல ஐடியா.. சென்னை கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடமாடும் ஏடிஎம் அறிமுகம்: ராதாகிருஷ்ணன் தகவல் நல்ல ஐடியா.. சென்னை கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடமாடும் ஏடிஎம் அறிமுகம்: ராதாகிருஷ்ணன் தகவல்

குறிப்பாக, மும்பை மற்றும் புனே பிராந்தியங்களில் லாக்டவுன் நீட்டிக்கப்படுமாம். மகாராஷ்டிராவின் 90 சதவீத கேஸ்களுக்கு இரு நகரங்களும் காரணமாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். உள்துறை அமைச்சக உத்தரவுப்படி நாடு முழுக்க மே 17ம் தேதி, லாக்டவுன் நிறைவடைகிறது

English summary
There is a claim circulating on WhatsApp that says that the entire city of Mumbai would be under a military lockdown. The Army or Navy personnel are not being deployed in Mumbai to maintain law and order in the city. This is a fake message and please do not forward it or believe in it. Meanwhile, Chief Minister of Maharashtra, Uddhav Thackeray said on Thursday that the lockdown may be extended till the end of May, especially in the Mumbai and Pune regions. Both cities have contributed to 90 per cent of Maharashtra's cases so far. The extended lockdown announced by the Home Ministry ends on May 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X