For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருந்தாளுநர்கள் கிளீனிக் திறக்கலாமா?.. மத்திய அரசு அனுமதியா?.. அதெல்லாம் பொய்.. நம்பாதீங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் உள்ள மருந்தாளுநர்கள் மருத்துவ கிளீனிக்குகளை திறக்கவும் மருந்துகளை பரிந்துரைக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒரு பொய்யான செய்தி வைரலாகி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம்.

பொதுவாக மருந்தாளுநர்கள் அதாவது பார்மாசிஸ்ட்கள் மருந்து கடைகளில், மருத்துவமனைகளில் பணியாற்றுபவர். மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிலும் இவர்களது பங்கு இருக்கும். எந்த வியாதியாக இருந்து உடல்நிலை பாதிப்பாக இருந்தாலும் மருந்து கடைகளில் போய் மருந்து வாங்கி உண்ணக் கூடாது என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Fake: Government has not permitted Pharmacists to open clinic

இந்த நிலையில் மருத்துவர்களை போல் மருந்தாளுநர்களும் மருத்துவ கிளீனிக்குகளை திறக்கவும் மருந்துகளை பரிந்துரை செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்ததாக ஒரு ஹிந்தி செய்தித்தாளில் செய்தி வெளியானது.

இந்த செய்தி தவறானது. இந்திய மருந்தாளுநர் விதிகளில் அப்படி எந்த ஒரு விதிகளும் இல்லை. இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஒன் இந்தியா சரிபார்த்தது. அதில் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்து தருவது மட்டுமே மருந்தாளுநர்களின் பணியாகும்.

Fake: Government has not permitted Pharmacists to open clinic

மருந்தாளுநர்களுக்கு கூடுதல் பணிகளை வழங்கும் வகையில் ஏற்கெனவே உள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள கோரிக்கைகள் எழுந்துள்ளன. அவை அரசின் பார்வையில் உள்ளது. ஆனால் மருந்தாளுநர்கள் மருத்துவ கிளீனிக்குகளை திறக்கலாம் என்ற ஒரு திருத்தம் நிச்சயம் செய்யப்படாது.

Fact Check

வெளியான செய்தி

மருந்தாளுநர்கள் கிளீனிக்குகளை தொடங்கவும் மருந்துகளை பரிந்துரைக்கவும் அரசு அனுமதி

முடிவு

அரசு அது போன்ற ஒரு முடிவை எடுக்கவில்லை

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fake News: Government has not permitted any pharmacists to open clinics and to prescribe medicines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X