For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிமாச்சல் ரெஜிமெண்ட்டை உருவாக்குகிறதா இந்திய ராணுவம்? பொய்ச் செய்தி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவம் ஹிமாச்சல் ரெஜிமெண்ட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருப்பது பொய் செய்தி என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

கங்காராவை தலைமையிடமாகக் கொண்டு ஹிமாச்சல் ரெஜிமெண்ட்டை ராணுவம் உருவாக்க உள்ளது என்பது ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவிய செய்தி. ஆனால் இச்செய்தியை ராணுவம் மறுத்துள்ளது.

Fake: Indian Army has no plans of creating a Himachal Regiment

இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஹிமாச்சல் ரெஜிமெண்ட் என தனியே ஒன்றை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை. இது தொடர்பான செய்திகள் பொய்யானவை. வதந்தியை பரப்பி இருக்கிறார்கள் என கூறியுள்ளனர்.

அதுவும் ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பின் பதன்கோட் பகுதியை சேர்ந்தவர்கள் நேரடியாக இந்த ரெஜிமெண்ட்டில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஹிமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கடந்த ஆண்டு, ஹிமாச்சல் ரெஜிமெண்ட் என தனி ஒரு படைப்பிரிவை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    India - China இடையே போர் மூளும் அபாயம்? | Oneindia Tamil

     மக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி! மக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி!

    English summary
    There is a message that is circulating on the social media about the creation of a Himachal Regiment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X