For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் வருமானத்தில் 18% கட்டாயமாக பிடித்தம் செய்யப்படுமா? வைரலாக சுற்றும் போலி மெசேஜ்

Google Oneindia Tamil News

சென்னை: வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தில் 18 சதவீதத்தை டெபாசிட் செய்வது கட்டாயமாக்கும் ஒரு சட்டத்தை அரசு கொண்டு வரும் என்று கூறி ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. ஆனால் இது போலி மெசேஜ் ஆகும். உங்கள் வருமானத்தில் 18 சதவீதத்தை கட்டாய வைப்புத் திட்டத்தில் டெபாசிட் செய்வது கட்டாயமில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

பணத்தை கொடுக்க தயாராக இருங்கள். சிடிஏ -1963 என்ற சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கட்டாய வைப்புச் சட்டம் 1963 என்பது, அனைத்து வரி செலுத்துவோர், சொத்து உரிமையாளர்கள் மற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

Fake: It is not compulsory for you to deposit 18 per cent of your income in Compulsory Deposit Scheme

இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. 1962 மற்றும் 1971 போர்களுக்குப் பின்னர், இதுபோன்ற உத்தரவு கட்டாயமாக்கப்பட்டது. கட்டாய டெபாசிட் சட்டம் (ஐடிபி) 1974ன் கீழ், வரி செலுத்துவோர், அவர்களின் வருமானத்தில் 18 சதவீதத்தை டெபாசிட் செய்வதை கட்டாயமாக்கியது.

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுகிறதா.. அமைச்சர் விளக்கம்மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுகிறதா.. அமைச்சர் விளக்கம்

இது முற்றிலும் ஆதாரமற்ற செய்தி. வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தில் 18 சதவீதத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என கட்டாயமாக உத்தரவிடும் திட்டம் அரசிடம் இல்லை, என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) சங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் 'ஃபோர்ஸ் (நிதி விருப்பங்கள் மற்றும் கோவிட் -19 தொற்றுநோய்க்கு பதில்') என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்தனர். மற்றும் ரூ .5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு செல்வ வரி விதிக்க வேண்டும் என்பதும் ஒரு பரிந்துரையாகும்.

English summary
The Compulsory Deposit Scheme (ITP) Act 1974 forced tax payers to deposit up 18 per cent of income in the scheme.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X