For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை மாதம் நடைபெறுவதாக போலி மெசேஜ் பரவுகிறது.. எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: ஜேஇஇ மெயின் 2020 தேர்வு (JEE Main 2020) இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் என்று ஒரு போலி செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Recommended Video

    ராணுவத்தை களமிறக்க மத்திய அரசு யோசனையா | ஜேஇஇ மெயின் தேர்வு ஜூலை மாதம்?

    இந்த செய்தி போலியானது என்று தேசிய தேர்வு நிறுவனம் (NTA) தெளிவுபடுத்தியுள்ளது.

    Fake: JEE Main 2020 exam is not being held in the first week of July

    ஜே.இ.இ (முதன்மை) தேர்வை 2020 ஜூலை முதல் வாரத்திற்கு மாற்றியமைப்பது தொடர்பாக 14/04/2020 தேதியிட்ட போலி பொது அறிவிப்பு சமூக ஊடகங்களில் பரவி வருவதாக தேசிய தேர்வு அமைப்பு கவனத்திற்கு வந்துள்ளது.

    அனைத்து விண்ணப்பதாரர்களும், JEE (முதன்மை) தேர்வுக்கு ஆஜராகவுள்ளவர்கள், புழக்கத்தில் விடப்பட்ட போலி பொது அறிவிப்பில் எந்த உண்மையும் இல்லை என்று இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது, என்டிஏ குறிப்பு கூறுகிறது.

    இதுபோன்ற தவறான மற்றும் போலி அறிவிப்புகளால் விண்ணப்பதாரர்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்று அறிவுறுத்தப்படுவதாகவும் என்.டி.ஏ தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களை தவறாக வழிநடத்த இதுபோன்ற தவறான தகவல்களை உருவாக்கி பரப்புகின்ற நேர்மையற்றவர்களுக்கு எதிராக ஐ.டி சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம் என்.டி.ஏ கடுமையான நடவடிக்கை எடுக்கும், என்று தெரிவித்துள்ளது.

    விண்ணப்பதாரர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ செய்தித்தளங்களில் இருந்து உண்மையான தகவல்களை எதிர்பார்க்க வேண்டும் என்றும், என்.டி.ஏ கூறியது. சரியான தகவல்களைப் பெற, விண்ணப்பதாரர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஐ பார்க்கலாம். மேலும் தகவலுக்கு பின்வரும் எண்களுக்கு அழைப்பு விடுக்கலாம்: 8287471852, 8178359845, 9650173668, 9599676953 மற்றும் 8882356803.

    English summary
    It has come to the notice of the National Testing Agency (NTA) that a fake Public Notice dated 14/04/2020 has been circulating in social media regarding rescheduling of the JEE(Main) examination to the first week of July 2020. All candidates who are due to appear for JEE(Main) examination are hereby informed that there is no truth in the circulated fake Public Notice," a note by the NTA reads.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X