For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Fake News Buster: சாலை முழுக்க சேறும், சாக்கடையும்.. வாரணாசி சாலையா இப்படி? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

லக்னோ: முழுக்க முழுக்க சாக்கடை கழிவுகளாக நிரம்பி காணப்படும் சாலை ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியின் புகைப்படம் இது என்று இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

Recommended Video

    Corona vaccine போட்டுக்கொண்ட Putin மகள் இறந்துவிட்டதாக பரவிய Fake News| Oneindia Tamil

    உத்தர பிரதேசத்தில் இருக்கும் வாரணாசி சாலைகள் சாக்கடை நிரம்பி காணப்படுவதாக இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கீழ் வரும் தொகுதி மிக மோசமாக சுத்தமின்றி காணப்படுகிறது என்று இந்த புகைப்படத்தில் எழுதப்பட்டுள்ளது,.

    Fake News Buster: Images circulating as Varanasi dirty road are really from Delhi

    பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி குறித்து பரவி வரும் இந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது ஆகும். வாரணாசி தொகுதி, கங்கை நதிக்கு அருகே இருக்கும் நகரங்களில் மிகவும் சுத்தமான நகரம் என்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ''சுவச் சுர்வேக்சன் 2020'' மூலம் 4000 நகரங்களில் செய்யப்பட்ட ஆய்வில் வாரணாசி கடைசியில் சுத்தமான நகரம் என்று தேர்வானது.

    இப்படிப்பட்ட நிலையில்தான் வாரணாசி சாலைகள் சாக்கடை நிரம்பி காணப்படுவதாக பொய்யான புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படம் உண்மையில் டெல்லியில் எடுக்கப்பட்டது. 2018ல் டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் இது.

    சங் விஹார் சாலை பகுதியில் இந்த படம் எடுக்கப்பட்டது. அப்போது இங்கு கட்டப்பட்டு வந்த பாதாள சாக்கடை குழாய் ஒன்று உடைந்ததால், இப்படி சாலையில் சாக்கடை சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சாலை இப்போதும் இதே போல் சேறும் சகதியுமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது .

    மற்றபடி டெல்லி புகைப்படத்தை பொய்யாக வாரணாசி புகைப்படம் என்று இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

    Fact Check

    வெளியான செய்தி

    வாரணாசி சாலையில் சாக்கடை நிரம்பி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது .

    முடிவு

    இந்த புகைப்படம் வாரணாசியை சேர்ந்தது கிடையாது. இது டெல்லியை சேர்ந்த சங் விஹார் பகுதியில் 2018ல் எடுக்கப்பட்டது.

    ரேட்டிங்

    False
    பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
    English summary
    Fake News Buster: Images circulating as Varanasi dirty road are really from Delhi Sang Vihar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X