For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்குகிறதா? உண்மை என்ன?.. தென்னக ரயில்வே விளக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வரும் 7 ஆம் தேதி முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் லாக்டவுன் தளர்வுகள் கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்தது. தமிழகத்தில் தற்போது மாவட்டத்திற்கு இடையே பயணம் மேற்கொள்ள இ பாஸ் முறை ரத்து செய்யயப்பட்டு உள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.

மக்கள் இதனால் அதிக அளவில் மாவட்டத்திற்கு உள்ளே தற்போது பயணிக்க தொடங்கி உள்ளனர். இன்னொரு பக்கம் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே விரைவு பேருந்து போக்குவரத்து வரும் 7ம் தேதி துவங்குகிறது.

ரயில்கள் எப்படி இயங்கும்

ரயில்கள் எப்படி இயங்கும்

இன்னொரு பக்கம் செப்டம்பர் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் மொத்தம் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 9 ரயில்கள் இயக்கப்படும். மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வசதியாக இந்த ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்பட உள்ளது.

கூட்டம் அதிகம்

கூட்டம் அதிகம்

தற்போது சென்னையில் புறநகர் ரயில்கள் இயங்கவில்லை. மெட்ரோவும் 7ம் தேதிதான் தொடங்கும். இதனால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. மக்கள் பேரூந்துகளில் கூட்டமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் புறநகர் ரயில் சேவை தொடங்குமா என்று கேள்வி எழுந்தது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

இந்த நிலையில்தான் சென்னையில் சென்னையில் செப்டம்பர் 7-ந்தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடக்கப்படும் செய்திகள் வெளியானது. தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று செய்திகள் வெளியானது இதற்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் என்றும் கூட செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் சென்னையில் வரும் 7 ஆம் தேதி முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் மறுப்பு

ஆனால் மறுப்பு

அதில், சென்னையில் புறநகர் ரயில்களும் இப்போது இயக்கப்படாது. இது தொடர்பாக அட்டவணை எதையும் வெளியிடவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை. அதனால் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

சென்னையில் வரும் 7 ஆம் தேதி முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று வெளியான செய்தி.

முடிவு

சென்னையில் வரும் 7 ஆம் தேதி முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fake News Buster: No Chennai Suburban Railway service won't start on September 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X