For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய ரயில்வே துறையை அதானி நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்களா? பரவும் வதந்தி.. பின்னணி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ரயில்வே துறையை அதானியின் அதானி குரூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு விற்றுவிட்டதாக இணையத்தில் பொய்யான செய்திகள் பரவி வருகிறது.

இணையத்தில் சமீப நாட்களாக நெட்டிசன்கள் சிலர் பொய்யான வதந்திகளை பரப்புவதை வழக்கமாக வைத்து உள்ளனர். சின்ன சின்ன அளவில் வதந்திகள் இருந்த நிலையில் தற்போது பெரிய அளவில் வதந்திகள் பரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய ரயில்வேயை அதானியின் அதானி குரூப் நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.

Fake News Buster: No, Indian Railway didnt sell to Adani Groups

அதன்படி இந்திய ரயில்வே மொத்தமாக விற்கப்பட்டுவிட்டது. அதனுடைய 7 தொழிற்சாலைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, விற்பனைக்காக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் 3.5 லட்சம் ஊழியர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக அதானி நிறுவனம் இந்திய ரயில்வேயை வாங்கி உள்ளது.

இணையத்தில் இது தொடர்பாக செய்தி குறிப்பு ஒன்று வைரலாகி வருகிறது. அதோட இந்திய ரயில்வேயை அதானி ரயில்வே என்று மாற்றிவிட்டனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இணையத்தில் இப்படி பரவி வரும் செய்தி முழுக்க முழுக்க பொய்யாகும்.

பள்ளி, கல்லூரிகள் ஒவ்வொரு கட்டமாக திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததாக பரவும் செய்தி உண்மையா?பள்ளி, கல்லூரிகள் ஒவ்வொரு கட்டமாக திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததாக பரவும் செய்தி உண்மையா?

உண்மையில் இந்தியாவில் ரயில்வே துறையில் சில பிரிவுகளை மட்டும் தனியார் மயமாக்கி உள்ளனர். உதாரணமாக சரக்கு ரயில் போக்குவரத்தை அதானி நிறுவனம் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளது. மற்றபடி மொத்தமாக ரயில்வே தனியாருக்கு விற்கப்படவில்லை.

இது தொடர்பாக இணையத்தில் பரவும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்.

Fact Check

வெளியான செய்தி

இந்திய ரயில்வேயை அதானியின் அதானி குரூப் நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.

முடிவு

ரயில்வே துறையை அதானி குரூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு விற்றுவிட்டதாக இணையத்தில் பொய்யான செய்திகள் பரவி வருகிறது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fake News Buster: No, Indian Railway didn't sell to Adani Groups completely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X