For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fake News Buster: கல்வான் பகுதியில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

லடாக்: லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதாக பொய்யான வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

நாடு முழுக்க கடந்த 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இருந்தாலும் கட்டுப்பாடுகளுக்கு இடையே அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடந்தது.

Fake News Buster: No, Indian soldiers didnt celebrate Ganesh Chaturthi in Galwan

இந்த நிலையில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்திய மற்றும் சீன வீரர்கள் மோதிக்கொண்ட பகுதியில், இந்த கொண்டாட்டம் நடந்ததாக இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் கணபதி கோஷம் எழுப்பி, மேளங்கள் முழங்க விழாவை கொண்டாடுவது போல இதில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ இந்த வருடம் எடுக்கப்பட்டது கிடையாது. இந்த வீடியோ கடந்த வருடம் எடுக்கப்பட்டது ஆகும் .

எனக்கு, என் மனைவிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை- ட்விட்டரில் விநாயகர் சிலை படம் மகளுக்காக... உதயநிதி எனக்கு, என் மனைவிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை- ட்விட்டரில் விநாயகர் சிலை படம் மகளுக்காக... உதயநிதி

அதுவும் கல்வான் பகுதியில் எடுக்கப்படவில்லை. கார்கில் பகுதியில் இந்திய ராணுவப்படை 2019 செப்டம்பர் மாதம் இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி உள்ளனர். இந்த பழைய வீடியோவை கல்வான் பகுதியில் எடுக்கப்பட்ட புதிய வீடியோ என்று பொய்யாக பரப்பி வருகிறார்கள்.

Fact Check

வெளியான செய்தி

கல்வான் எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார்கள்.

முடிவு

இந்த வீடியோ கல்வான் பகுதியில் எடுக்கப்பட்டது கிடையாது. இது கார்கில் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மூலம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட போது 2019ல் எடுக்கப்பட்டது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fake News Buster: No, Indian soldiers didn't celebrate Ganesh Chaturthi in Galwan valley this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X