For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு முழுவதும் மின் கட்டணம் தள்ளுபடியா.. வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் வீட்டு மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வாட்ஸ்அப்பில் வரும் தகவலில் உண்மையில்லை.

மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதால் பல மாநிலங்கள் தள்ளுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாக வாடஸ் அப்பில் திட்டமிட்டு பொய்கள் பரப்பப்படுகின்றன. அந்த வாட்ஸ் அப் செய்தியில். பிஜ்லி பில் மாஃபி யோஜனா (பில் தள்ளுபடி திட்டம்) என்ற பெயரில் செப்டம்பர் 1 முதல் நாட்டின் அனைத்து வீடுகளின் மின்சார கட்டணத்தையும் தள்ளுபடி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்று இந்தியில் கூறப்பட்டுள்ளது.

Fake news: Centre has not devised a scheme to waive electricity bills

உண்மை என்ன: இது முற்றிலும் தவறான தகவல் . எந்த ஒரு மாநில அரசாங்கமும் அத்தகைய எந்த நடவடிக்கைக்கு திட்டமிடவில்லை. மின்சார கட்டணங்களை தள்ளுபடி செய்வது குறித்து மகாராஷ்டிரா அரசு மட்டும் பரிசீலித்து வருகிறது. ஒவ்வொரு வீட்டின் மின் நுகர்வு அடிப்படையில் தள்ளுபடியை மூன்று அடுக்குகளாகப் பிரிப்பது குறித்து அரசு யோசித்து வந்தது. இந்த மாதங்களுக்கான பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள பயன்பாடு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் பயன்பாட்டிற்கு 100 யூனிட்டுகள் அதிகமாக இருந்தால் அது அந்த கூடுதல் செலவை அரசு ஏற்கும் என்று கூறப்பட்டது.

101-300 யூனிட்களுக்கு 75 சதவீத அதிகப்படியான தொகையையும் 50 சதவீதம் 500 யூனிட்டுகளையும் தள்ளுபடி செய்ய முன்மொழியப்பட்டது.. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பலருக்கும் மின்கட்டணம் உயர்ந்ததாக புகார் எழுந்ததால் திட்டம் முன்மொழியப்பட்டது . ஆனால் இந்த முன்மொழிவை ஏற்க மகாராஷ்டிரா நிதியமைச்சகம் நிராகரித்துவிட்டது. இதனால் அங்கும் மின்கட்டணம் தள்ளுபடி இல்லை என்பது இப்போது உறுதியாகி உள்ளது.

"இந்தியை நீக்குங்க.. நீக்க முடியலன்னா 22 மொழிகளையும் சேருங்க".. பெங்களூர் மெட்ரோவுக்கு அதிரடி ஆர்டர்

மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு பல மாநிலங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. உயர்ந்துள்ள மின் கட்டணம் குறித்து பலர் புகார் தெரிவித்துள்ளனர். மின் கட்டணத்தை தள்ளுபடி செய்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் என்று கோரிக்கைகள் வருகிறது.

ஆனால் மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ மின் கட்டணத்தை தள்ளுபடி செய்வது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. வாட்ஸ் அப்பில் தகவல்கள் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசின் ஊடகமான பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

நாடு முழுவதும் மின் கட்டணம் தள்ளுபடி

முடிவு

மத்திய, மாநில அரசுகள் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்வது தொடர்பாக அறிவிப்பு இல்லை.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
The forward in Hindi says that just like the Bijli Bill Maafi Yojana ( Bill Waiver Scheme), the government has planned to waive off the electricity bills of all households in the country starting September 1. This is a misleading claim and no government has planned any such move.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X