For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளி, கல்லூரிகள் ஒவ்வொரு கட்டமாக திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததாக பரவும் செய்தி உண்மையா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகள் ஒவ்வொரு கட்டமாக திறக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்ததாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் மத்திய கல்வி அமைச்சர் பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், செப்டம்பர் 21-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கும். 15 நாட்களுக்குப் பின்னர் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளும் அதன்பின்னர் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும் என மத்திய அமைச்சர் அறிவித்திருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

Fake News: Education minister and re opening of colleges and schools

அதேபோல் தேர்வுகளை அடுத்த வாரம் முதல் நடத்துவது தொடர்பாக பல்கலைக் கழகங்கள் முடிவு எடுக்கலாம்; அக்டோபர் 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் கட்டாயம் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்திருக்கிறார் என்றும் அந்த சமூக வலைதள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மை அல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இப்படியான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நோயாளிகள் இல்லை...இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா மையம் மூடப்படுகிறது!!நோயாளிகள் இல்லை...இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா மையம் மூடப்படுகிறது!!

மத்திய உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 30-ந் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளில் செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஆன்லைன், தொலைதூர கல்விகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது; 50% ஆசிரியர்கள்- ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்கு செப்.21-க்குப் பின் வரவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

அக்டோபர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறப்பு என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

முடிவு

மத்திய கல்வி அமைச்சர் இப்படியான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
A fake news shared in Social medias on Union Home Minsiter's statement on re opening of colleges and schools. This is not true.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X