For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கி கணக்கில் போட்ட பணத்தை அரசு திரும்ப எடுத்துவிடுமாம்.. தீயாக பரவும் வதந்தி.. நம்பாதீர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: ஏழைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்ட பணம் அரசால் திரும்பப் பெறப்படும் என்று சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் வந்துள்ளன.
கொரோனா விவகாரத்தை வைத்துக்கொண்டு பல்வேறு போலி மெசேஜ்கள் பரவுகின்றன. அதில் ஒரு மெசேஜ், கரிப் கல்யாண் திட்டம் தொடர்பானது.

Recommended Video

    Fake News Buster : எஸ்பிஐ வங்கியின் AePS பண பரிவர்த்தனையை ஆர்பிஐ முடக்கியதா?

    கொரோனா பாதிப்பு காரணமாக, பிரதமர் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ், வங்கிக் கணக்கிற்கு தலா ரூ .500 மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த பணத்தை பலனாளிகள் வங்கியிலிருந்து எடுக்காவிட்டால், அந்த பணம், திரும்பப் பெறப்படும் என்று சமூக ஊடக வதந்திகள் கூறுகின்றன.

    Fake news: Govt is not taking back money transferred under PM Garib Kalyan Yojana

    இது பீதியை ஏற்படுத்தும் ஒரு குறும்பு செய்தி. பணப் பரிமாற்றம் குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டபோது, பணத்தை வங்கி கணக்கிலிருந்து திரும்பப் பெறாவிட்டால், அரசால், அந்த பணம் திரும்பப் பெறப்படும் என்பது போல அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

    ஆரோக்யா சேது ஆப்: கொரோனாவிடம் இருந்து உங்களை காக்கும் ஆப்.. பிரதமர் மோடியின் ஸ்பெஷல் கோரிக்கை! ஆரோக்யா சேது ஆப்: கொரோனாவிடம் இருந்து உங்களை காக்கும் ஆப்.. பிரதமர் மோடியின் ஸ்பெஷல் கோரிக்கை!

    நிவாரண நடவடிக்கையாக, அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ .500 ஏழைகளுக்கு பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், பணத்தை எப்போது, ​​எடுக்க வேண்டும் என்பது குறித்த எந்தவொரு விதிமுறையையும் அரசு குறிப்பிடவில்லை. இது முற்றிலும் பலனாளியின் விருப்பம்தான். எனவே, தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை யாருக்கும் பரப்பிவிடாதீர்கள்.

    English summary
    There have been several messages that are claiming that the money transferred to the poor will be taken back by the government. The message says that the Rs 500 transferred to the bank account under the PM Garib Kalyan Yojana will be taken back if not withdrawn.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X