For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக்கில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா? சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக்கில் இந்தியா விமானப் படைக்குச் சொந்தமான எம்17 ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்படுவது பொய்யான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் முபாஷர் லுக்மன் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், லடாக்கில் இந்தியாவின் எம்17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளனதாக கூறப்பட்டுள்ளது.

Fake News: Indian M 17 did not crash in Ladakh

இதேபோல் பலரும் இந்த படத்தை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இது 2 ஆண்டுகளுக்கு முந்தைய படம்.

வேஷ்டி அணிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...இந்தி தெரியாது போடா...டி சர்ட் அணிந்தாரா?வேஷ்டி அணிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...இந்தி தெரியாது போடா...டி சர்ட் அணிந்தாரா?

கேதார்நாத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்17 ரக ஹெலிகாப்டர் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 3-ல் விபத்துக்குள்ளானது. அப்போது ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டிருந்தது.

கேதார்நாத் கோவில் அருகே இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி எனவும் தலைப்பிட்டிருந்தது ஏ.என்.ஐ. தற்போது லடாக் பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இப்படியான ஒரு சம்பவமே நிகழவில்லை. சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்தான் பரப்பிவிடப்படுகிறது.

Fact Check

வெளியான செய்தி

லடாக்கில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

முடிவு

2 ஆண்டுகளுக்கு முந்தைய விபத்து படம்

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
A Pakistani journalist posted on his Twitter account claiming that an Indian M 17 has crashed in Ladakh. But it is fake claim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X