For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா பாஜக எம்பியின் தாய் கொரோனாவால் இறக்கவும் இல்லை- விதிகள் மீறலும் இல்லை- பரவியது பொய் செய்தி!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா பாஜக எம்பி அல்போன்ஸ் கண்ணந்தானத்தின் தாயார் கொரோனாவால் இறந்துவிட்டதாகவும் இறுதி சடங்கில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் பொய்யான செய்திகள் பரவி வருகின்றன.

பாஜக எம்பி அல்போன்ஸ் கண்ணந்தானத்தின் தாயார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு முன்னர் 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த 2-லும் அவருக்கு நெகட்டிவ் என்றுதான் ரிசல்ட் வந்தது.

Fake News: Kerala BJP MP’s mother did not have COVID-19, no protocols were broken

எம்பி அல்போன்ஸ் கண்ணந்தானம் தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் தாயாரின் படத்துடன் விரிவாகவே இதுபற்றி எழுதியுள்ளார். அதில், ஜூன் 5-ந்தேதியன்று தாயார் கொரோனாவால் குணமடைந்தார். ஆனால் கொரோனாவால் அவரது உடல் உறுப்புகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

அவரது நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இறுதியில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவர் மரணமடையும் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால் அவரது இறுதி சடங்குகளை கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்த வேண்டிய சூழ்நிலையும் இல்லை என விளக்கம் தந்திருக்கிறார்.

என்னாது.. கோவிட் தடுப்பூசி போட்ட புடின் மகள் உயிரிழப்பா?.. வேகமாக பரவும் பொய் செய்தி! என்னாது.. கோவிட் தடுப்பூசி போட்ட புடின் மகள் உயிரிழப்பா?.. வேகமாக பரவும் பொய் செய்தி!

கேரளா அரசும் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறது. ஆனாலும் பாஜக எம்பியின் தாயார் கொரோனாவால் இறந்தார்; அவரது இறுதி சடங்கில் விதிகள் மீறப்பட்டன என பொய்யான செய்திகள் பரப்பிவிடப்பட்டு வருகின்றன.

English summary
A post on Twitter said that BJP MP Alphons Kannanthanam hides his mother's death due to COVID19 and conducts funeral; Row erupts This claim is not right and the MP's mother had tested negative twice for COVID-19 before she passed away at AIIMS due to internal organ failure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X