For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாக்டவுனால் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என்பது உண்மை அல்ல!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுன் அமலில் இருப்பதால் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதியம் நிறுத்தப்படும் என்கிற செய்திகள் அனைத்தும் உண்மை அல்ல என்பது தெரியவந்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. நாட்டில் அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

Fake news: No proposal to cut salary for railway employees

பழைய ரயில் பெட்டிகள், கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டுகளாகவும் மாற்றப்பட்டன. அதேநேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கான சரக்கு ரயில்கள் மட்டும் முழு வீச்சில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் ரயில்கள் இயக்கப்படாத சூழலில் ரயில்வே ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட உள்ளது என்கிற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சநிலை உருவானது.

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா - தாராவியில் 30 பேருக்கு பாதிப்புமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா - தாராவியில் 30 பேருக்கு பாதிப்பு

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் நாம் கேட்ட போது. அப்படியான எந்த ஒரு முடிவையுமே ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவே இல்லை. இது தொடர்பான செய்திகள், தகவல்கள் அனைத்துமே வதந்தி என விளக்கம் அளித்திருக்கின்றனர்.

Recommended Video

    கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை புனரமைப்பது எப்படி? கமல் வெளியிட்ட அறிக்கை

    ஏற்கனவே ரயில்வே ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதாக ஒரு செய்தி வெளியானது. அது பொய்யான செய்தி என்பது பின்னர் நிரூபணமானது. மத்திய அரசு இது தொடர்பாக கூறுகையில், மத்திய அரசு ஓய்வூதியத்தில் 20%-த்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியானது. அது உண்மை இல்லை. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஊதியம், ஓய்வூதியத்தின் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளாது என தெளிவுபடுத்தப்பட்டது.

    English summary
    Here's good news for Indian Railway employees who have fallen for rumours claiming there will be a cut in their salary due to COVID-19 situation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X