For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைரலாகும் எல்லையில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் மோதல் தொடர்பான படங்கள்.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லையில் இந்தியா- சீனா இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் தொடர்பான சில படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பங்கரில் பதுங்கி இருக்கும் வீரர்கள் பிடிக்கப்படுவது போன்ற படங்களின் உண்மைத்தன்மை என்ன? என்பதை பார்ப்போம்.

பிரேக்கிங் நியூஸ்- கிழக்கு லடாக்கில் உச்சகட்ட மோதல் என்ற தலைப்பில் சில படங்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. உண்மையில் இந்த படங்கள் சில ஆண்டுகளுக்கு முந்தையவை.

Fake News : Old image of India-China soldiers goes viral

Northern Command, Indian Army-ன் ட்விட்டர் அக்கவுண்ட்டில் 2016-ல் பதிவிடப்பட்ட படங்கள். இந்திய-சீனா ராணுவ வீரர்கள் இணைந்து மனிதாபிமான உதவிகள், பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகளை எப்படி எல்லாம் எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சிகளை மேற்கொண்டனர்.

2016- அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட படங்களைத்தான் தற்போது சிலர் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

Fake News : Old image of India-China soldiers goes viral

இந்த படங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்து ஊடகங்களிலும் வந்திருக்கின்றன. இந்திய ராணுவத்தில் பிரிகேடியர் ஆர்.எஸ். ராமன், சீனாவின் கர்னல் ஃபான் ஜூன் தலைமையிலான வீரர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருந்தனர். இதனால் தற்போது ஷேர் செய்யப்பட்டு வரும் படங்கள், லடாக் எல்லையில் தற்போது எடுக்கப்பட்ட படங்கள் அல்ல என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

எல்லையில் இந்திய-சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொள்ளும் படம்

முடிவு

4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய-சீனா ராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய ஒத்திகை நிகழ்வு

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
An image of the Army has gone viral. The posts claim that soldiers are capturing a bunker in Ladakh. But it is very old images.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X