For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகள் போராட்டம்: ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர் எரிக்கப்பட்டதாக வெளியானது உண்மை அல்ல

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தினால் ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர் எரிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் வீடியோ, 2017-ல் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து ஜியோ செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டன என்றும் போராட்டத்தின் எதிரொலியாக ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர் எரிக்கப்பட்டது எனவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Fake News: Reliance Jio tower not burnt during the ongoing farmer protests

ஆனால் இந்த வீடியோ 2017-ல் எடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதியன்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வசந்த் விகார் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் வீட்டு மாடியில் இருந்த செல்போன் டவர் தீப்பிடித்து எரிந்தது.

மின்சார சர்க்கியூட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த தீ விபத்து நிகழ்ந்தது. இதை ஊடகங்கள் அனைத்தும் அப்போதும் ஒளிபரப்பு செய்தன. இந்த பழைய படம், வீடியோவை வைத்துதான் விவசாயிகள் போராட்டத்தின் போது நடந்தது என சித்தரிக்கின்றனர். இது உண்மை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டும் உள்ளது.

Fact Check

வெளியான செய்தி

விவசாயிகள் போராட்டத்தால் ஜியோ செல்போன் டவர் தீ வைத்து எரிப்பு

முடிவு

விவசாயிகள் போராட்டத்தின் போது எந்த செல்போன் டவரும் தீ வைத்து எரிக்கப்படவில்லை. பழைய வீடியோ.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Here is fact check news. Reliance Jio tower not burnt during the ongoing Delhi farmer protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X