For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது மும்பை, புனே நகரங்கள் ராணுவ வசம் ஒப்படைப்பா? பொய் செய்தியாம்

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே நகரங்கள் ராணுவம் வசம் ஒப்படைக்கப்படுவதாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் மும்பை, புனே தொடர்பாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் இந்த நகரங்கள் வரும் சனிக்கிழமை முதல் ராணுவத்தின் வசம் 10 நாட்கள் ஒப்படைக்கப்படுகிறதாம். அதனால் பால் மற்றும் மருந்துகள் மட்டுமே வெளியில் கிடைக்கும்.

Fake: No military lockdown of Mumbai, Pune announced

ஆகையால் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகளை இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

ராணுவத்தின் வசம் இந்த நகரங்கள் செல்வது குறித்த அறிவிப்பு எந்த நிமிடத்திலும் வெளியாகலாம் என்கிறது அந்த சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி. உண்மையில் மகாராஷ்டிரா அரசிடம் அப்படி ஒரு திட்டமே இல்லை.

நாங்க ரெடி.. இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் 'என்ட்ரியாகும்' அமெரிக்கா.. ட்ரம்ப் அதிரடி அறிவிப்புநாங்க ரெடி.. இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் 'என்ட்ரியாகும்' அமெரிக்கா.. ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

Recommended Video

    எல்லையில் 3 கி.மீ. தொலைவுக்குள் ஊடுருவிய சீன ராணுவம் ? | Oneindia Tamil

    இதனால் இந்த செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது அப்பட்டமான பொய் செய்திதான். தற்போதைய லாக்டவுன் கட்டுப்பாடுகள், தளர்வுகளின் படி அனைத்தும் இயல்பாகவே நடைபெறும். அத்தியாவசியப் பொருட்கள் எப்போதும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    There is a Fake message on the social media that claims that Mumbai and Pune would be under a military lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X