For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாக்டவுன்.. கடைகளை திறக்கும் மூடும் நேரம் குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு வகையான கடைகளை திறப்பது, மூடுவது தொடர்பாக அரசு நேரத்தை நிர்ணயித்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Lockdown 4.0 : யாருக்கு என்ன தளர்வு... முழு தகவல்

    சமூக வலைதளங்களில் கடைகளை திறப்பு மற்றும் மூடும் நேரம் தொடர்பான ஒரு செய்தி தகவல் பரவி வருகிறது. அதில் ஒவ்வொரு வகையான கடைகளும் இந்த நேரத்தில் திறக்கப்பட்டு இந்த நேரத்தில்தான் மூட வேண்டும் என்கிற தகவல் இடம்பெற்றுள்ளது.

    Fake: No timing set by government for shops to open and shut

    இத்தகைய செய்திகள் உண்மை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதுபோல எந்த ஒரு வழிகாட்டுதலையும் இதுவரை வெளியிடவில்லை.

    லாக்டவுன் 4.0-ல் எப்படியான கட்டுப்பாடுகள் இருக்கும்? தளர்வுகள் இருக்கும்? என்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்புகளை வெளியிட உள்ளது. மாநில அரசுகளின் பரிந்துரைகள் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

    லாக்டவுன் 4.0, எத்தனை நாட்கள் நீட்டிப்பு.. இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது மத்திய அரசு லாக்டவுன் 4.0, எத்தனை நாட்கள் நீட்டிப்பு.. இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது மத்திய அரசு

    4.0 லாக்டவுனில் பொது போக்குவரத்தை எப்படி படிப்படியாக செயல்படுத்துவது என்பது குறித்து வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட உள்ளது. அரசு பேருந்துகளை ரெட் ஜோனில் கூட இயக்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

    என்னதான் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் கட்டாயமாக்கப்படும். டாக்ஸிகளில் 2 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆட்டோக்களில் டிரைவரை தவிர ஒரே ஒரு பயணிதான் பயணிக்க இயலும் என்கிற வகையில் கட்டுப்பாட்டு தளர்வுகள் இருக்கும் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.

    English summary
    A message is being circulated that speaks about the timings with regard to the various shop timings during the lockdown extension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X