For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாமியாரின் புகைபிடிக்கும் பைப்பால் 300 பேருக்கு கொரோனா.. உலா வந்த செய்தி.. கலெக்டர் மறுப்பு

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: சாமியார் ஒருவர் பயன்படுத்திய, புகை பிடிக்கும் பைப் காரணமாக 300 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெப்சைட் ஒன்று கூறியிருந்தது. இதை மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்த சம்பவம், ஜெய்ப்பூரின், டிரான்ஸ்போர்ட் நகரில் நடந்ததாக செய்தி போர்டல் தெரிவித்துள்ளது. அங்கேயுள்ள ஒரு சாமியார் பயன்படுத்திய புகைபிடிக்கும், குழாய் காரணமாக, குறைந்தது 300 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Fake: Sadhu’s chillam in Jaipur did not infect 300 people with coronavirus

இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார். டிரான்ஸ்போர்ட் நகரில் இதுபோன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும், இந்த செய்தி ஆதாரமற்றது மற்றும் போலியானது என்றும் கலெக்டர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் 450 ஐ நெருங்குகிறது- பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டுகிறது மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் 450 ஐ நெருங்குகிறது- பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டுகிறது

இதுபோன்ற செய்திகள், பீதி மற்றும் பரபரப்பை பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனவே இவற்றை தயவுசெய்து நம்ப வேண்டாம். செய்தி போலியானது. இவ்வாறு கலெக்டர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்திற்கு பிறகு அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Recommended Video

    Fack News Buster : கொரோனா தடுப்பூசி போட்ட முதல் பெண் உயிரிழப்பா?

    English summary
    A news portal claimed that 300 people were affected with coronavirus due to a chillam (pipe) of a sadhu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X