For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய ராணுவத்தினருக்கு எதிராக மைக்ரோவேவ் ஆயுதங்களை சீனா பயன்படுத்தியதா?

Google Oneindia Tamil News

டெல்லி; சீன ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இந்திய ராணுவத்தினருக்கு எதிராக மைக்ரோவேவ் ஆயுதங்களை பயன்படுத்தியாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

    China-வின் பொய்! Indian Army-க்கு எதிராக Microwave ஆயுதமா? | Oneindia Tamil

    பெய்ஜிங்கில் உள்ள ரென்மின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியர் ஜின் கன்ராங் கூறியதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியில், இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ள இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த மலை சிகரங்களை பறிப்பதற்காக, சீன ராணுவம் மைக்ரோவேவ் ஆயுதங்களை கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஆகஸ்ட் 29 அன்று இந்த சம்பவம் நடந்தது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

    Fake: The Chinese PLA did not use microwave arms against Indian soldiers at LAC

    இந்த செய்தி போலியானது என்று இராணுவம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ராணுவ வட்டாரம் கூறுகையில், இந்திய வீரர்கள் மீது மைக்ரோவேவ் ஆயுதங்களை கொண்டு சீன ராணுவம் தாக்கியதாக சொல்வது பொய்யான மற்றும் நகைச்சுவையான செய்தி. இது எல்லையைத் தாண்டி இந்தியாவிற்கு எதிராக வரும் உளவியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதி.. ஆகஸ்ட் 29-30 தேதிகளில் பங்கோங் த்சோ-சுஷூலின் தென் கரையில் பல மலை சிகரங்களை இந்திய ராணுவம் கைப்பற்றிய அதிர்ச்சியிலிருந்து சீன ராணுவம் மீளவில்லை என்றனர்.

    கிழக்கு லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகளில் பதட்டங்கள் அதிகமாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கிய பிரச்சனை இப்போது வரை நீடிக்கிறது, இரு நாடுகளும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. கடந்த வாரம், இரு தரப்பினரும் படைகளை விலக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முன்வந்துள்ளனர் என்று சில சாதகமான செய்திகள் வந்தன. இரு தரப்பினரின் இராணுவத் தளபதிகள் விரைவில் கூடி படைகளை விலக்கி கொள்வது குறித்து விவாதித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதுதான் நிஜம்.

    Fact Check

    வெளியான செய்தி

    சீன ராணுவம் மைக்ரோவேவ் ஆயுதங்களை இந்திய ராணுவத்தினருக்கு எதிராக பயன்படுத்தினர்

    முடிவு

    இந்திய ராணுவம் இந்த தகவல் பொய் என மறுப்பு

    ரேட்டிங்

    False
    பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
    English summary
    Some media reports had claimed that the Chinese PLA had used microwave arms at the Line of Actual Control and forced Indian soldiers to retread
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X