For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது பெங்களூர் கலவர வீடியோ அல்ல.. மேற்கு வங்கத்தில் நடந்தது.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூர் கலவரம் தொடர்பாக ஒரு போலியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக சுற்றி வருகிறது. அது உண்மைதானா என்பது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் அந்த வீடியோ என்ன? அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது? என்று பார்ப்போம்.

ஹிந்தியில் வீடியோ பற்றிய விபரத்தை எழுதியுள்ளனர். "இந்துக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் அவர்கள் வேலையை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த கூட்டம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதையும் அதை கட்டுப்படுத்த காவல்துறை எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது", இவ்வாறு அதில் வாசகம் எழுதப்பட்டு வீடியோ வேகமாக ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

Fake: This viral video of violence is from West Bengal, not Bengaluru

பெங்களூரில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தின் காட்சி என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது பற்றி ஆய்வு செய்தபோது, கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி ஏஎன்ஐ செய்தி ஏஜென்சியில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு வன்முறை சம்பவம் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டது தெரியவந்தது. அந்த வீடியோவை தான் பெங்களூர் கலவரம் என்று பரப்பி வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலம், உத்தர் தின்ஜாபூர் பகுதியிலுல்ள கலகச் என்ற பகுதியில் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தியபோது வன்முறை வெடித்து காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோதான் இது ஆகும்.

Fake: This viral video of violence is from West Bengal, not Bengaluru

ஏஎன்ஐ செய்தி நிறுவனம், தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், சாலைகளை மறித்து போராட்டம் நடத்தியும், பஸ்களை மற்றும் காவல்துறையினரின் வாகனங்கள் தீ வைத்து எரித்தும், கூட்டு பலாத்கார சம்பவத்துக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர் என்று படம் வெளியிட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு மீடியாக்கள் இந்த பலாத்கார சம்பவம் மற்றும் அது சார்ந்த வன்முறை சம்பவங்களை செய்தியாக வெளியிட்டிருந்தன. எனவே, இதற்கும், பெங்களூர் கலவரத்துக்கும், எந்த தொடர்பும் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

சொல்லப்படுவது: பெங்களூர் வன்முறை சம்பவத்தில் எடுக்கப்பட்ட வீடியோ

முடிவு

கண்டறிந்தது: பெங்களூரில் எடுக்கப்பட்ட வீடியோ கிடையாது, மேற்கு வங்க மாநிலத்தின் வீடியோ

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
A video has gone viral on Facebook and the claim is that it is from a scene from the Bengaluru riots of August 11 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X