For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மசூதிக்குள் போவோம் என்று மத குரு கொந்தளித்ததாக பரவும் போலி செய்தி.. நடந்தது பாகிஸ்தானில்

Google Oneindia Tamil News

டெல்லி: மசூதிகளுக்குள் நுழைவதை அரசு தடை செய்ய கூடாது, இந்த தடையை எதிர்த்து உயிரையும் கொடுப்போம் என இஸ்லாமிய மத குரு ஒருவர் பேசுவதை போன்ற வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. அது இந்தியாவிலுள்ள மசூதி கிடையாது, பாகிஸ்தானிலுள்ள மசூதி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், இஸ்லாமிய மத குரு இப்படி பேசுவதை போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. நாட்டின் சட்ட திட்டத்தை இவர் மீறுகிறார் என்று வலதுசாரிகள் குற்றம்சாட்டி ஷேர் செய்து வந்தனர்.

False: Video of cleric challenging closure of Mosques is from Pakistan, not India

ஆனால், இந்த சம்பவம் என்பது, இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவம். பாகிஸ்தானின் மன்சேராவில் ஒரு இறுதிச் சடங்கிற்காக ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஜமாஅத் உலமா-இ-இஸ்லாம் (எஃப்) தலைவர் முப்தி கிஃபாயத்துல்லா இந்த உரையை நிகழ்த்தியுள்ளார்.

நீங்கள் இப்படி செய்தால், அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பேரில் மசூதிகள் குறிவைக்கப்படுகின்றன என்று நாங்கள் நினைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் என்று அவர் கூறினார். நாங்கள் எங்கள் உயிரைக் கூட கொடுப்போம், ஆனால் எங்கள் மசூதிகளை விட்டு வெளியேற மாட்டோம் என்று அவர் கூறியிருந்தார்.

ட்விட்டரில் ஒரு பயனர் இந்த வீடியோ பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தினார். இப்படி அரசுக்கு எதிராக உரையாற்றிய முப்தி கிஃபாயத்துல்லா கைது செய்யப்பட்டார் என்பதை உஸ்மான் அலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
A video of a man addressing a group of people and saying that they should oppose the government order prohibiting entry into Mosques. He says that if the government does not allow more than 5 persons into Mosques, then the people are ready to give up their lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X