For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய - சீன மோதல்.. அருணாசலப்பிரதேச எல்லையோர மக்கள் ஊரை காலி செய்தார்களா.. உண்மை என்ன?

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது அருணாசலப் பிரதேச எல்லையில் இருந்து இந்தியாவை சேர்ந்த கிராம மக்கள் பலர் வெளியேற தொடங்கி உள்ளனர்.

Google Oneindia Tamil News

இட்டாநகர்: இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது அருணாசலப் பிரதேச எல்லையில் இருந்து இந்தியாவை சேர்ந்த கிராம மக்கள் பலர் வெளியேறப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இது தொடர்பான செய்திகளை மறுத்துள்ளது.

இந்தியா - சீனா இடையிலான மோதல் லடாக்கை தாண்டி தற்போது பல்வேறு எல்லைகளுக்கு விரிவடைய தொடங்கி உள்ளது. முதலில் லடாக்கில் இருந்து தற்போது சிக்கிம், அருணாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லையிலும் சீனா அத்துமீற தொடங்கி உள்ளது.

முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களை தற்போது சீனா குறி வைத்து உள்ளது. பல வருடமாக அருணாசலப் பிரதேசம் சீனாவின் குறியாக இருந்த நிலையில், தற்போது அருணாசலப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை செய்ய சீனா முயன்று வருகிறது.

அம்பாலாவில் சர்வ தர்மா பூஜையுடன் இந்திய விமானப்படையில் இணையும் 5 ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவில் சர்வ தர்மா பூஜையுடன் இந்திய விமானப்படையில் இணையும் 5 ரஃபேல் போர் விமானங்கள்

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

இந்தியாவின் கவனம் முழுக்க லடாக் மற்றும் சிக்கிமில் இருந்த நிலையில், தற்போது சீனா அருணாசலப் பிரதேச பகுதியில் வீரர்களை குவித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக அருணாசலப் பிரதேச பகுதியில் அதிக அளவில் வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள். நவீன ஆயுதங்கள், கோடாரிகள், கத்தி, வாள்கள் என்று கொடூரமான ஆயுதங்களை கொண்டு இவர்கள் எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

 ராணுவ வாகனங்கள்

ராணுவ வாகனங்கள்

அதோடு எல்லையில் சீனாவின் வாகனங்களும் குவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் சீனாவின் ரோந்து பணிகளை பார்த்து பழக்கப்பட்ட மக்கள்தான் அருணாசலப் பிரதேச மக்கள். ஆனால் இந்த முறை படைகள் ஆயுதங்களோடு வந்துள்ளனர். போருக்கு செல்வது போல இவர்கள் வந்து இருக்கிறார்கள்.

 கிராம மக்கள்

கிராம மக்கள்

அதோடு அருணாசலப் பிரதேச எல்லையில் இருக்கும் கிராமங்களுக்கு அருகே இவர்கள் கடந்த ஒரு வாரமாக ரோந்து பணிகளை செய்து வருகிறார்கள். கிராமங்களுக்கு அருகே கொடூரமான ஆயுதங்கள் உடன் இவர்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அருணாசலப் பிரதேசத்தில் இருக்கும் நாச்சோ, டாபரிஜோ, மேல் ஸுபான் ஸ்ரீ, டாபங் ஆகிய கிராமங்களில்தான் பதற்றம் நிலவி வருகிறது.

 மக்கள் வெளியேற்றம்

மக்கள் வெளியேற்றம்

இப்படி கத்தி, கோடாரிகள் உடன் சீனாவின் வீரர்கள் வீடுகளுக்கு அருகே ரோந்து பணிகள் மேற்கொள்வது, அருணாசலப் பிரதேச மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நிலைமை இப்படி இருக்க இது தொடார்பாக வதந்தி ஒன்றும் வெளியாகி உள்ளது. அதன்படி அருணாசலப் பிரதேச எல்லையில் இருந்து இந்தியாவை சேர்ந்த கிராம மக்கள் பலர் வெளியேறப்போவதாக நேற்று மாலை செய்திகள் வெளியானது. ஆனால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இதை மறுத்துள்ளது.

 பாதுகாப்பு இல்லை

பாதுகாப்பு இல்லை

அருணாசலப் பிரதேச எல்லையில் இருந்து யாரும் வெளியேறவில்லை. பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். அருணாசலப்பிரதேச மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். எல்லையில் இதுவரை யாரும் ஊர்களை காலி செய்யவில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் சீனாவின் ராணுவம் மூலம் கடத்தப்பட்டதாக தகவல் வந்தது.இவர்கள் சீனாவின் எல்லைக்கு உள்ளே கண்டுபிடிக்கப்பட்டதாக சீனாவின் ராணுவம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

 ஆனால் மறுப்பு

ஆனால் மறுப்பு

இன்னொரு பக்கம் அருணாசலப் பிரதேச பகுதியை தனி மாநிலமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது சீனாவிற்கு கீழ் வரும் ஒரு இடம். சீனாவிற்கு கீழ் வரும் திபெத்தின் ஒரு பகுதிதான் அருணாசலப் பிரதேசம் என்று சீனா வெளிப்படையாக அறிவித்துள்ளது. இங்கு இருக்கும் மேக் மாஹன் எல்லை பகுதியை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அருணாசலப் பிரதேசத்தில் சீனா படைகளை குவித்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

அருணாசலப் பிரதேச எல்லையில் இருந்து இந்தியாவை சேர்ந்த கிராம மக்கள் பலர் வெளியேறப்போவதாக செய்திகள் வெளியானது.

முடிவு

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்த செய்தியை மறுத்துள்ளது. மக்கள் யாரும் ஊரை காலி செய்யவில்லை என்று உறுதி செய்துள்ளது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
No, People didn't leave their village after the Chinese army came near Arunachal Pradesh border yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X