For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக் எல்லையில் எச்சரிப்பு பேனர்.. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கையா?.. உண்மையில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அங்கு சர்ச்சைக்குரிய வாசகம் எழுதப்பட்ட பேனர் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெற்றி பெற சண்டையிட வேண்டும் (Fight to Win) என இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுவதாக வைரலாகிறது. ஆனால் இதில் உண்மையில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Recommended Video

    India வீரர்களை துப்பாக்கி எடுக்க விடாமல் தடுத்த ஒப்பந்தம்... என்ன அது ?

    லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாங்காங் ஏரி பகுதியில் இந்திய- சீன வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

    அதில் சுமூகமாக செல்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினரை கற்களால் தாக்கினர்.

    அந்த ஒரு புள்ளி.. விட்டுத்தர மாட்டோம்.. லடாக்கில் இந்திய ராணுவத்தின் புது வியூகம்.. மாஸ்டர் ஸ்டிரோக்அந்த ஒரு புள்ளி.. விட்டுத்தர மாட்டோம்.. லடாக்கில் இந்திய ராணுவத்தின் புது வியூகம்.. மாஸ்டர் ஸ்டிரோக்

    பேனர்

    பேனர்

    இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் சீன ராணுவத்தினர் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் லடாக்கின் பாங்காங் ஏரியை ஒட்டிய ஒரு பகுதியில் Fight to Win எனும் வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பழைய செய்தி

    பழைய செய்தி

    இந்த பேனர் இந்தியாவுக்கு சீனா விடுத்த எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டது. "லடாக்கில் சீனா நிறுவிய பேனர் மோடிக்கு தெளிவான தகவல்" எனும் தலைப்பில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில் இது பழைய செய்தி என தெரியவந்தது.

    பேனர்

    பேனர்

    இந்த புகைப்படம் கடந்த 2012-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. மேலும் இந்த பேனரை இந்திய ராணுவம் லடாக் எல்லை பகுதியில் நிறுவி இருப்பது தெரியவந்தது. மேலும் இது இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்து சீனாவால் வைக்கப்பட்ட பேனர் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இந்த பேனரை சீனா நிறுவவில்லை.

    குழப்பம்

    குழப்பம்

    எனவே சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது போன்ற போலி செய்திகள் உலா வருவதால் தேவையற்ற குழப்பங்களுக்குத்தான் வழிவகுக்கும்.

    English summary
    An old image of Indian Army banner in Ladakh goes viral that China threat to India. This is fake news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X