For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் கட்சி தொடங்குகிறாரா விஜய்? பரபரக்கும் சோஷியல் மீடியா.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக ஊடகங்களில் காட்டுத் தீ போல் செய்திகள் பரவின. ஆனால் அது உண்மை இல்லை என விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல்இயக்கமாக மாற்றி உள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின,

The news spreading about Vijay political party registered today is untrue

அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்த தகவல் உண்மையா என்பதை இப்போது பார்ப்போம்

நடிகர் விஜய், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருப்பபதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் பரவி வந்தது. எனவே, அவர் தற்போது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீப்போல் பரவின.

லவ் ஜிகாத்.. மதமாற்றத்திற்கு காதலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை- யோகி மாதிரியே பேசும் எடியூரப்பாலவ் ஜிகாத்.. மதமாற்றத்திற்கு காதலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை- யோகி மாதிரியே பேசும் எடியூரப்பா

விஜய் அரசியலில் ஈடுபட போகிறார் என்று பரவிய தகவலை சற்றும் எதிர்பார்க்காத விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினார். ட்விட்டரில் விஜய் தான் டாப் டிரெண்டாகினார். இந்நிலையில் விஜய்யின் பிஆர்ஒ இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் பிஆர்ஒ ரியாஸ் அகமது, சமூக வலைதளங்களில் விஜய் கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் என்ற செய்தி தவறானது என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Fact Check

வெளியான செய்தி

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார்

முடிவு

விஜய் அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
As the assembly elections approached, news spread like wildfire in the media that actor Vijay was starting a political party. But Vijay's party has categorically denied that it is true.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X