For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Fake news: என்னாது கொரோனா சிகிச்சைக்கு மருந்து சீட்டா?.. போலியான பிரிஸ்கிரிப்ஷனை நம்பாதீங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதோடு ஐசிஎம்ஆர் அறிவுறுத்திய சில மருந்துகளை உட்கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் உலா வரும் மருந்து சீட்டு போலியானது என்றும் அதை யாரும் நம்பி சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயை எதிர்த்து போராடும் தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மக்கள் எதை தின்றால் பித்தம் தெளியும் என தேடி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் நல்ல செய்திகளும் பொய்யான செய்திகளும் உலா வருகின்றன.

This medical prescription which roams in SM on Covid 19 treatment is Fake

அது போல் டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் மயக்கவியல் துறையின் மூத்த நிபுணர் ராஜ் கமல் அகர்வால் பெயரில் ஒரு போலியான மருத்துவக் குறிப்புகள் அடங்கிய சீட்டு உலா வருகிறது. அதில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்தாலும் அவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) வழிமுறைகளின்படி தனிமையில் இருக்க வேண்டும்.

சமூக விலகல், கை சுத்தம், முகக் கவசம் அணிதல் ஆகியவற்றுடன் இந்த சீட்டில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஹைட்ராக்ஸி குளோரோ குயினைன் 400 எம்ஜியை வாரத்தில் ஒருமுறையும் வைட்டமின் சி மருந்துகளை வாரத்தில் ஒரு முறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதில் காய்ச்சல் , தொண்டை வலி, இருமல் ஏற்பட்டால் தனித்தனி மருந்துகளை எடுத்துக் கொள்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக இழுத்து பூட்டுங்கள் தமிழ்நாட்டை.. டெஸ்ட்டுகளை அதிகரியுங்கள்.. கட்டுப்படுத்த வேறு வழியில்லை!மொத்தமாக இழுத்து பூட்டுங்கள் தமிழ்நாட்டை.. டெஸ்ட்டுகளை அதிகரியுங்கள்.. கட்டுப்படுத்த வேறு வழியில்லை!

இதுகுறித்து அகர்வாலிடம் கேட்ட போது அது போன்ற ஒரு பரிந்துரையை தான் அளிக்கவே இல்லை. அதில் உள்ளது தனது கையெழுத்தே இல்லை என்று தெரிவித்துள்ளார். அது போல் மருத்துவ நிர்வாகமும் அந்த மருந்துச் சீட்டு போலியானது என தெரிவித்துள்ளது. அது போல் ஹைட்ராக்ஸி குளோரோ குயினைன் மருந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு தாங்கள் பரிந்துரைக்கவில்லை என ஐஎம்சிஆரும் தெளிவுப்படுத்தியுள்ளது.

Recommended Video

    DOCTORS DANCE| MASTER பாட்டுக்கு குத்தாட்டம் போடும் டாக்டர்கள்| CORONA STRESS BUSTER|ONE INDIA TAMIL

    எனவே கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இது போன்ற போலி செய்திகளை உலவவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    This Medical prescription on Covid 19 treatment is fake which has medicines for corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X