For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது பாங்கோங் த்சோ ஏரியில் சீன சுற்றுலாப் பயணிகளா? பொய்யான தகவலுடன் வலம் வரும் வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் கிழக்குப் பகுதியில் சர்ச்சைக்குரிய பாங்கோங் த்சோ ஏரியில் சீனா சுற்றுலா பயணிகள் சவாரி செய்வதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. உண்மையில் இது சீனாவின் எல்லைக்குட்பட்ட பாங்கோங் த்சோ ஏரிப் பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.

லடாக் கிழக்கில் பாங்கோங் த்சோ ஏரி, இந்தியா- சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் முக்கியமான இடமாகும். இருநாடுகளின் எல்லையானது பாங்கோங் த்சோ ஏரி வழியாக செல்கிறது.

Viral video of Chinese tourists at Pangong Lake is not from indian territory

தற்போதைய எல்லை பதற்றங்கள் அனைத்தும் பாங்கோங் த்சோ ஏரியை மையமாகக் கொண்டிருக்கிறது. இதனிடையே Salman Nizami என்ற காங்கிரஸ் தலைவர் தமது ட்விட்டர் பக்கத்தில், பாங்கோங் த்சோ ஏரியில் சீன சுற்றுலா பயணிகள் வலம் வருவதாக இந்த வீடியோவை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்திருக்கிறார்.

சீனாவின் அரசு ஊடகவியலாளர் Shen Shiwei-தான் இந்த வீடியோ மற்றும் படங்களை தமது ட்விடர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிலேயே தெளிவாக இது சீனாவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் எடுக்கப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

https://twitter.com/shen_shiwei/status/1303371531012190208

அதிலும் கூட இந்த ஏரியில் மூன்றில் 2 பங்கு சீனா வசமும், ஒரு பகுதி இந்தியாவின் பக்கமும் உள்ளது எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் மத்திய அரசுக்கு எதிராக உண்மையை மறைத்து ஷேர் செய்து வருகின்றனர்.

Fact Check

வெளியான செய்தி

பாங்கோங் த்சோ ஏரியில் சீனா சுற்றுலா பயணிகள்

முடிவு

சீனா கட்டுப்பாட்டில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா சுற்றுலா பயணிகள்.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
A Viral video of Chinese tourists at Pangong Lake is not from indian territory in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X