Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சரிந்துகொண்டே வந்தது. நேற்றும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது. கடந்த 8 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,440 ரூபாய் குறைந்துள்ள நிலையில் இன்று திடீர் ஷாக் கொடுத்துள்ளது தங்கம் விலை. இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,040 அதிகரித்துள்ளது. இது நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து உச்சம் தொட ஆரம்பித்தது. ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் என்று இருந்த நிலையில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதற்கு பிறகும் தங்கம் விலை நிற்காமல் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் கனவில் தான் தங்கம் வாங்க முடியுமோ என சாமானிய மக்கள் கவலையடைந்தனர்.

Gold Price Surges Rs 1 040 Jump in a Day Ends 8-Day Losing Streak

இன்று அதிரடியாக உயர்ந்தது

பிப்ரவரி மாதத்திலும் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. திடீரென உச்சம் தொட்டு பின்னர் படிப்படியாக சரிந்து வந்தது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் தங்கம் விலை தடாலடியாக சரிந்தது. படிப்படியாக குறைந்து வந்த தங்கம் விலை மார்ச் மாதத்தில் மீண்டும் உயர்ந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

கடந்த மாதம் 4 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000 என்ற அளவில் இருந்தது. அதன்பிறகும் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. கடந்த 30 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,17,040-க்கு விற்பனை ஆனது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து இருந்தது. கடந்த 8 நாட்களில் ரூ.4,440 குறைந்து இருந்தது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.130 குறைந்து ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்தது.

தங்கம், வெள்ளி விலை என்ன?

இதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,600 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.130 அதிகரித்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8 நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தங்கம் விலையை போல வெள்ளி விலையும் குறைந்து வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றும் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600

06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440
04.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,840
03.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000

02.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,16,000
01-06-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
31-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
30-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,040
29-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

28-05-2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
27-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
26-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
25-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
24-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840

23-05-2026 - ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,480
20-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
19-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,960

18-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
17-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,000
15-05-2026 - ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 - ஒரு சவரன் ரூ.1,20,400

13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640
11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+