இறாலின் அவசியம்.. மூளை திறன், ரத்த விருத்தி, எலும்பு வலுப்பெற உதவும் இறால் மீன்.. யார் தவிர்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறால் மீனில் புரோட்டீன், வைட்டமின் D, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஒமேகா 3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.. இறால் மீன்களை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? கர்ப்பிணிகள், குழந்தைகள் இறால் மீனை சாப்பிடலாமா? இறால் மீன் மட்டுமல்ல,

இறால் மீன்கள் மழைக்காலங்களில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை.. காரணம், இந்த குறிப்பிட்ட கால கட்டத்தில்தான் அதிகமாக குஞ்சுகள் பொறிக்கப்படுகின்றன.. எப்போதுமே இறால் மீனை வாங்கினால் அதிலுள்ள மெல்லிய நரம்புகளை நன்றாக சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.

குடல் செரிமானம்

இந்த நரம்பை நீக்காவிட்டால் குடலில் செரிமானம் பாதிப்பு, அலர்ஜி, மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற உபாதைகள் வந்துவிடும்.. இறால் வாங்கும்போது, கவனத்துடன் பார்த்து வாங்க வேண்டும்.. நச்சு தன்மையானவையாக இருந்தால் தவிர்த்துவிட வேண்டும். சிலருக்கு இறால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படலாம் என்பதால், இதனை அவர்கள் தவிர்க்கலாம்.

இறாலில் குறைவான கொழுப்பு இருந்தாலும், கொலஸ்ட்ரால் நிறைய இருக்கின்றன.. எனவே, இதய நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது... அதேசமயம் உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இறால் மிகவும் நல்லது.

காரணம், கார்போஹைட்ரேட் இதில் கிடையாது... இரும்பு சத்துடன், அயோடின் சத்தும் உள்ளதால் கர்ப்பிணிகள் இறால் சாப்பிடலாம். இதனால் உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க தூண்டப்படுவதுடன், குழந்தையின் மூளையின் வளர்ச்சிக்கும் இது தேவைப்படுகிறது.

மூளை அணுக்கள்

அதேபோல, அஸ்டக்ஸாந்த் இறாலில் இருப்பதால், பிள்ளைகள் இதனை உணவில் சேர்த்து கொள்ளும்போது, நினைவுத்திறன் அதிகமாகும்.. மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுவதாக மருத்துவ ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.. ஹெபாரின் என்ற பொருள் இறாலில் இருப்பதால் கண் பார்வை சிதைவிலிருந்து தடுக்க செய்கிறது.

இறாலிலிருக்கும் கனிமங்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் முடி கொட்டுதல் ஏற்பட்டாலோ அல்லது முடி வளர்ச்சி நின்று விட்டாலோ, இறால்கள் கை கொடுக்கும். சரும மினுமினுப்புக்கும் இறால் பயன்படுகிறது.

தசைகள் ஆக்ஸிஜன்கள்

ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியது, இரும்பு சத்து அதிகமாக உள்ள இறால் மீனாகும். இதனால் தசைகளுக்கும் ஆக்ஸிஜன்கள் செரிவாக கிடைக்கும்.. அதுமட்டுமல்ல, கனிமச்சத்து இறாலில் அதிகமாக உள்ளதால், ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் பேருதவி புரிகிறது.

இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம், பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்க செய்யும்.. இறாலில் அஸ்டக்ஸாந்தின் போன்ற கரோடினாய்டு இருப்பதால், அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காக்கும். அதேபோல, செலினியம் என்ற அரியக்கனிமம் இறாலில் நிறைந்திருப்பதால், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+