For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

22 வயதில் இறந்த மகனின் ‘மம்மி’யை 18 வருடங்களாக 'வோட்கா’ ஊற்றி பாதுகாத்து வரும் தாய்

Google Oneindia Tamil News

டிபிலிசி: ஜியார்ஜியா நாட்டில் இறந்து போன தனது 22 வயது மகனின் சடலத்தை கடந்த 18 வருடங்களாக பாதுகாத்து வருகிறார் தாய் ஒருவர்.

ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் சியுரி வரத்ஸ்கேலியா, இவரது மகன் ஜோனி பகரத்ஸே கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எதிர்பாரா விதமாக திடீரென மரணமடைந்தான். இறக்கும் போது ஜோனியின் வயது 22. ஆயினும் மகனைப் பிரிய மனமில்லாத அந்தத் தாய், மகனின் உடலைப் பதப்படுத்தி வீட்டிலேயே வைத்துக் கொண்டார்.

ஒரு நாள் கனவில் தோன்றிய அசரீரி குரல் ஒன்று, ஜோனியின் உடல் கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது தினமும் வோட்காவை ஊற்றச் சொன்னதாம். அது முதல் தினமும் வோட்காவை ஜோனியின் உடல் மீது தெளித்து வந்துள்ளார் சியுரி.

மகனின் உடலைப் பாதுகாப்பதற்காக சியுரி கூறும் காரணம், ‘ ஜோனியின் குழந்தைகள் தனது தந்தை எப்படிப் பட்டவர் என்பதைக் காண வேண்டும்' என்பதற்காதத் தானாம். ஒருநாள் வோட்கா ஊற்றாவிட்டாலும் ஜோனின் உடல் கருப்பு நிறமாக மாறிவிடும் எனத் தெரிவித்துள்ளார் சியுரி.

English summary
In some cultures, it wouldn't be considered strange for a mother to take care of her son for 40 years. However, it might seem a little weird if he were dead for almost two decades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X