For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. மருத்துவ உதவியாளர் வேலை.. 400 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்க அழைப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையில் 400-க்கும் அதிகமான ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொலைபேசியில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில், 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ் திட்டத்தை ஜி.வி.கே.- இ.எம்.ஆா்.ஐ. நிறுவனம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

942 நான்கு சக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள், 41 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர உதவிக்காக இயக்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதன் காரணமாக கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவை மருத்துவ சேவைகளுக்கு இயக்கப்பட உள்ளன.

பாரி வள்ளலின் பறம்பு மலையை சிதைக்கும் கல்குவாரிகள்- போராட்டம் நடத்திய 65 பேர் கைதுபாரி வள்ளலின் பறம்பு மலையை சிதைக்கும் கல்குவாரிகள்- போராட்டம் நடத்திய 65 பேர் கைது

400 வேலைகள்

400 வேலைகள்

நெருக்கடியான இந்த சூழலில் புதிதாக 200 ஓட்டுநா்கள் மற்றும் 200 அவசரகால மருத்துவ உதவியாளா்களை பணியமா்த்தப்பட உள்ளார்கள். ஜி.வி.கே. - இ.எம்.ஆா்.ஐ. நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

ஓட்டுனராக என்ன தகுதி

ஓட்டுனராக என்ன தகுதி

ஓட்டுநா் பணியிடங்களில் சேர விருப்பம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள 24 - 35 வயதுக்குட்பட்டவா்கள் இப்பணியில் சேரலாம். ஓட்டுநா் உரிமம் பெற்று குறைந்தது மூன்று ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஓராண்டும் நிறைவு செய்திருப்பது அவசியம் ஆகும்.

தொலைப்பபேசியில் தேர்வு

தொலைப்பபேசியில் தேர்வு

அவசரகால மருத்துவ உதவியாளா்கள் பணியிடங்களில் சேர பிஎஸ்சி நா்சிங் அல்லது டிஜிஎன்எம் படிப்பை நிறைவு செய்திருப்பது அவசியம் ஆகும். வயது வரம்பு 19 - 30 வரை இருக்க வேண்டும். இந்த இரு பணியிடங்களுக்குத் தகுதியானவா்களைத் தோ்ந்தெடுக்க முதல் இரண்டு சுற்று தோ்வுகள் தொலைபேசி வாயிலாகவும், இறுதிச் சுற்று நோ்முகத் தோ்வாகவும் நடைபெறும்.

தேர்வில் பங்கேற்பது எப்படி

தேர்வில் பங்கேற்பது எப்படி

சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ளவா்கள் 91541 89421 அல்லது 91541 89422 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தோ்வில் பங்குபெறலாம். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா்கள் 91541 89423 அல்லது 91541 89425 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். வரும் 23-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு பணியிடத் தோ்வில் பங்குபெறலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
108 Ambulance Driver, Medical Assistant Job,. 400 vacancy, you can apply by mobile number before july 23
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X