• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அணுசக்தி துறையில் வேலை இருக்குங்க.. கைநிறைய சம்பளம்.. ஏன் யோசிக்கிறீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க

|

டெல்லி: இந்திய அணுசக்தி துறையில் 52 பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி உதவியாளர், கேண்டீன் உதவியாளர், ஸ்டைபண்டரி டிரெய்னி, டிரைவர் மற்றும் செவிலியர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு 52 காலியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

52 vacancies in the Indian nuclear industry

செவிலியர் பதவிக்கு 18 முதல் 30 வயது வரையிலும், துணை அதிகாரி பதவிக்கு 18 முதல் 40 வயது வரையிலும், டிரைவர் பதவிக்கு18 முதல் 27 வயது வரையிலும், பணி உதவியாளர் பதவிக்கு 18 முதல் 27 வயது வரையிலும் ஸ்டைபண்டரி டிரெய்னி வகைகளுக்கு 18 முதல் 24 வயது வரையிலும் இருக்க வேண்டும்.

இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள்.. கப்பலில் வேலைன்னா சும்மா.. அதுவும் மாலுமி வேலை!இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள்.. கப்பலில் வேலைன்னா சும்மா.. அதுவும் மாலுமி வேலை!

பி.எஸ்.சி / டிப்ளோமா / ஐ.டி.ஐ / எஸ்.எஸ்.சி / எச்.எஸ்.சி தகுதி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 20.05.2021-க்குள் www.vecc.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கான தனித்தனி கல்வித்தகுதி பற்றிய விவரங்கள் மற்றும் சம்பள விவரங்களை www.vecc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

English summary
People are to be selected to fill 52 vacancies in the Indian nuclear industry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X