For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8,10,12, ஐடிஐ படித்தவர்களா? பயிற்சியின் போதே ரூ.16000 வரை ஊக்க தொகை, அரசு வேலையில் முன்னுரிமை!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஐடிஐயில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.விரும்பும் நிறுவனத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் இப்பயிற்சிக்கு 1000 முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்படுகிறது. விவரங்களை இப்போது பார்ப்போம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஐடிஐ உதவி இயக்குனர் சுகுமார் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தேசிய தொழிற் பயிற்சி சான்றிதழ் பெறும் வகையில், ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் மற்றும் திறன் பயிற்சி ஏதும் பெறாத 8,10, மற்றும் 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள், மத்திய மாநில அரசு பொதுத்துறை மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்து பயிற்சி பெறலாம்.

 புதிய இணையதளம்

புதிய இணையதளம்

அதற்கு ஏதுவாக மத்திய அரசு திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் https://apprenticeshipindia.org/ என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம்

நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம்

தொழில் பயிற்சிபெற விரும்புவோர், தங்களது அசல் கல்வி சான்றிதழ், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு போன்ற விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து தாங்கள் விரும்பும் நிறுவனத்தில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்த பின்னர், பயிற்சி பெற விரும்பும் நிறுவனத்தை தேர்வு செய்து, குறிப்பிட்ட பிரிவில் விண்ணப்பிக்கலாம்.

தொழிற் பழகுனர் சான்றிதழ்

தொழிற் பழகுனர் சான்றிதழ்

நிறுவனம் தங்களின் விண்ணப்பத்தை ஏற்று ஒப்பந்தம் வழங்கும் நிகழ்வில் அந்த ஒப்பந்தத்தை ஏற்று பயிற்சி மேற்கொள்ளலாம். இப்பயிற்சிக்கு ரூ.10 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை உதவித்தொகை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. தொழிற் பழகுனர் சான்றிதழ் பெறுவோருக்கு அரசு வேலையில் முன்னுரிமையும் வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் கிடைக்கும்.

தொழில் பழகுனர்‘

தொழில் பழகுனர்‘


எனவே ஐடிஐ படித்தவர்கள் நேரடியாக ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சிக்கும், 8,10, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை அடிப்படை பயிற்சியும் அதனைத் தொடர்ந்து ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரை தொழிற் பழகுநர் பயிற்சி பெறுவதற்கும் புதிய இணையதளத்தில் பதிவு செய்து உரிய விண்ணப்பங்களுடன் ஓசூர் அரசு ஐடிஐ வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை அணுகலாம்" என்று கூறியுள்ளார்.

English summary
A new website has been launched to apply for apprenticeship at ITI. You can apply for training at any compan by this https://apprenticeshipindia.org/ website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X