கடற்படையில் பணிபுரிய ஆசையா?.. 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. விண்ணப்பிக்கும் முறை இதுதான்
சென்னை: இந்திய கடற்படையில் 76 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. .10th, +2 (பி.டெக்) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்), எக்ஸிகியூட்டிவ் ஐடி கிளை, எஸ்எஸ்சி அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
10 + 2 B.Tech பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2 ஜனவரி 2003 மற்றும் 1 ஜூலை 2005-க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும். SSC IT Executive பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜூலை 2, 1997 மற்றும் ஜனவரி 1, 2003 க்கு இடையில் பிறந்திருப்பது அவசியமாகும்.

10 + 2 B.Tech பதவிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களிலும் குறைந்தது 70% மதிப்பெண்கள் பெற்று இருப்பதும் அவசியமாகும். IT Executive பதவிக்கு 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
SSC IT Executive பதவிகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 10 +2 (B. Tech) பணியிடங்களுக்கு பிப்ரவரி 8 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் https://joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிபுரியும் இடம், சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை https://joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.