For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருமையான வாய்ப்பு.. இந்திய வனத்துறையில் பணியாற்ற விருப்பமா.. விண்ணப்பிக்கலாம் வாங்க

Google Oneindia Tamil News

டெல்லி: இயற்கையோடு பிண்ணிப்பிணைந்த வாழ்க்கை என்றால் அது வனத்துறை வேலை தான். அதில் மிக உயரிய பதவியான ஐஎப்எஸ் பணி என்பது ஐஏஎஸ் ஐபிஎஸ் பதவிகளுக்கு இணையானது.

Recommended Video

    Indian forest service jobs 2020| இந்திய வனத்துறையில் பணியாற்ற விருப்பமா

    90 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் வெளியிட்டுள்ளது.

    இந்த பதவிகளுக்கு வரும் மார்ச் 3ம் தேதிக்குள் யுபிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்களை இப்போது பார்ப்போம்

    யார் விண்ணப்பிக்கலாம் :

    யார் விண்ணப்பிக்கலாம் :

    வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், வேதியியல் பொறியியல், வனவியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் உள்ளிட்டவற்றில் இளங்கலை பட்டம் பெற்ற யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு

    வயது வரம்பு

    எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம். 01.08.2020 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 1988 ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதிக்கு பிறகு பிறந்தவாகவும், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    இரு தேர்வுகள்

    இரு தேர்வுகள்

    இதுவும் ஐஏஎஸ் ஐபிஎஸ் பதவிகளை போல்தான். முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி

    விண்ணப்பிக்க கடைசி தேதி

    http://www.upsconline.nic.in இணையதளத்தில் வரும் மார்ச் 3ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பித்து விடுங்கள். விண்ணப்பிக்க எவ்வளவு கட்டணம் என்றால், ரூ.100. செலுத்த வேண்டும். ஆன்லைனிலேயே செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்துள்ளது.

    தேர்வுகள் தேதிகள்

    தேர்வுகள் தேதிகள்

    முதலில் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பரில் மெயின் தேர்வு நடைபெறும் . முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 31.05.2020. தேர்வுக்கு செல்லும் போது போட்டோ ஐடி கொண்டு செல்ல வேண்டும். எதை கொண்டு செல்ல போகிறீர்களோ அதை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அப்லோட் செய்துவிட வேண்டும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் அளிக்கப்படும்.

    சென்னை மட்டுமே

    தமிழகத்தில் எழுத்துத் தேர்வை சென்னை, கோவை, மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட நான்கு இடங்களில் எழுதலாம். ஆனால் நவம்பரில் நடைபெறும் மெயின் தேர்வை தமிழகத்தில் சென்னையில் மட்டுமே எழுத முடியும். வேறு தேர்வு மையங்கள் கிடையாது. தென்னிந்தியாவில் சென்னை, ஹைதராபாத்தில் மட்டுமே மெயின் தேர்வை எழுத முடியும். முழு விவரங்களுக்கு கீழே உள்ள பிடிஎப்பில் பார்க்கலாம்.

    English summary
    indian forest service jobs 2020: are you want to willing ifs officer jobs, how to apply in upsc website, details here
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X