ரூ 1.5 லட்சம் சம்பளம்.. பேங்க் ஆப் பரோடாவில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. இப்படிதான் விண்ணப்பிக்கணும்
சென்னை: பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள வேளாண் சந்தைப்படுத்தல் அதிகாரி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாட்டிலுள்ள முக்கிய பொதுத்துறை வங்களில் ஒன்று பேங்க் ஆப் பரோடா. இதில் காலியாக உள்ள வேளாண் சந்தைப்படுத்தல் அதிகாரி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வங்கி துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் - 47
பணி: வேளாண் சந்தைப்படுத்தல் அதிகாரி (Agriculture Marketing Officer)
கல்வித் தகுதி: விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, பால் அறிவியல், மீன் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயம் சார்ந்த படிப்புகளில் எதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவில் எம்பிஏ அல்லது Post Graduate Diploma படித்திருக்க வேண்டும். விரிவான தகவல்களை அறிவிப்பில் பார்த்து தெரிந்துகொள்ளாலம்.
வயது வரம்பு: 25 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணிப்பக்கலாம்.
மத்திய அரசின் விதிமுறைகளின்படி ஒரு சில பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்பளம்: மெட்ரோ நகரங்களில் ஆண்டுக்கு ரூ 18 லட்சம் வரை
இதர நகரங்களில் ஆண்டுக்கு ரூ 15 லட்சம் வரை
தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வு மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஜனவரி 27 , 2022
விண்ணப்பிக்கக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100. இதர பிரிவிருக்கு ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும் என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்கூலுக்கு வாங்க.. மகாராஷ்டிராவில் 4 நாட்களில் திறக்கப்படும் பள்ளிகள்.. தமிழ்நாட்டில் என்ன நடக்கும்?
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-recruitment-of-agriculture-marketing-officer-06-16.pdf
விண்ணப்பிக்க