• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லாக்டவுனால் யூடர்ன்.. மூன்று மடங்கு சம்பளம், குவிந்து கிடக்கும் வேலைகள்.. எங்கு தெரியுமா?

|

பெங்களூரு: கடைநிலை ஊழியர்களுக்கான (ப்ளூ காலர்) வேலை வாய்ப்புகள் ஈகாமர்ஸ் மற்றும் தளவாடங்கள் போன்ற துறைகளில் அதிகரித்துள்ளது.

வேலைக்கு ஆள் எடுக்கும் நிபுணர்களின் கூற்றுப்படி, பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்ய ஈகாமர்ஸ் மற்றும் தளவாட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இதனால் இந்த துறையில் இன்னும் அதிகம் பேர் வேலைக்கு சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

தற்போதைய நிலையில் பெரும்பாலும் கிடங்கு மேலாண்மை, பேக்கேஜிங், வரிசைப்படுத்துதல், செக்யூரிட்டி மற்றும் விநியோகம் போன்றவற்றில் உள்ளன.

சென்னை சப் இன்ஸ்பெக்டர் கொரோனா தாக்கி மரணம் - காவல்துறையில் 4 பேரை பலி கொண்ட கொரோனா

பொருட்கள் டெலிவரி

பொருட்கள் டெலிவரி

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் அதிகரித்த காரணத்தால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன. மக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளுக்கு உள்ளே முடங்கி கிடப்பதால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வர வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்த திடீர் மாற்றத்தால் அமேசான், ப்ளிப்கார்ட், மைத்ரா, பிக் பாஸ்கெட், ஜியோ மார்ட் என அனைத்து ஈகாமர்ஸ் மற்றும் தளவாட நிறுவனங்களுக்கும் ஆர்ட்கள் குவிந்து வருகின்றன.

அதிகரித்த வேலைகள்

அதிகரித்த வேலைகள்

முன்னதாக லாக்டவுன் ஆரம்பித்த உடனேயே அமேசான் நிறுவனம் 10வது 12வது படித்த ஏராளமானோரை வேலைக்கு எடுத்தது. இதேபோல் ஈகாமர்ஸ் நிறுவனங்களும் கடைநிலை பணிகளுக்கு பல ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்துள்ளன. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் டெலிவரி பிரிவில் வேலைவாய்ப்புகள் 12 முதல் 15% வளர்ச்சி அடைந்துள்ளதாக டீம்லீஸ் தெரிவித்துள்ளது, இது ஜூன் மாதத்தில் 18-20% ஆக அதிகரித்துள்ளது.

டெலிவரி வேலைக்கு

டெலிவரி வேலைக்கு

மக்கள் ஆன்லைனில் மளிகை பொருட்கள் வாங்குவது இந்த காலக்கட்டத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்களை பேக்கிங் செய்து மற்றும் அதை கொண்டு சேர்க்கும் டெலிவரி வேலைக்கு அதிக நபர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே தான் இந்த வேலைக்கு அதிக நபர்களை ஈகாமர்ஸ் மற்றும் தளவாட நிறுவனங்கள் எடுத்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு இது மிகவும் சாதகமான சமிக்ஞை என்று டீம்லீஸ் சேவைகளின் தொழில்துறை உற்பத்தி மற்றும் பொறியியல் மற்றும் பொது ஊழியர்களின் வணிகத் தலைவர் சுதீப் சென் தெரிவித்தார். விநியோக ஊழியர்களுக்கான தேவை அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் மால்கள் மற்றும் உணவகங்களுக்கு மக்கள் செல்ல முடியாதது முக்கிய காரணம் என்றும் சுதீப் சென் தெரிவித்தார்.

ஊக்கத்தொகையும் தருகிறார்கள்

ஊக்கத்தொகையும் தருகிறார்கள்

அமேசான், க்ரோஃபர்ஸ், பிக் பாஸ்கெட் மற்றும் டீல்ஷேர் உள்ளிட்ட ஈகாமர்ஸ் நிறுவனங்கள் ஏற்கனவே கடந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான அடிப்படை ஊதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இந்த நிறுவனங்கள் சில தொழிலாளர்களுக்கு முந்தைய சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாக வழங்கி உள்ளன. தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது கூடுதலாக 15% ஊக்கத்தொகை வழங்குகின்றன. சிலருக்கு இலவசமாக விமான டிக்கெட்டுகள் கொடுத்து வேலைக்கு எடுத்து வருகின்றன.

  Google Sundar Pichai Announced a 75,000 crores | India’s Digital Economy
  ஆன்லைன் டெலிவரி

  ஆன்லைன் டெலிவரி

  கொரோனா பரவல் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் இனி மக்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கி பழகிவிட்டால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பதால் இந்த மாற்றம் ஆன்லைனில் பொருட்கள் டெலிவரி செய்யும் அத்தனை நிறுவனங்களின் காட்டிலும் மழைதான். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் கடைநிலை ஊழியர்கள் இன்னும் அதிக அளவில் வேலைக்கு எடுக்க அந்நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Blue-collar job openings saw an uptick in sectors like e-commerce and logistics, according to HR consultancies which expect a further spike to come about as companies prepare to cater to the festive season demand
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more