சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
சென்னை: சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ ( ஓமியோபதி) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
சென்னையை அடுத்த ஈசிஆர்சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.

இங்கு காலியாக உள்ள இரண்டு ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ ( ஓமியோபதி) பணிக்கு ஆன்லைன் மூலம் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் சேர்க்கப்பட உள்ள இந்த பணிக்கு அடிப்படை சம்பளமாக ரூ.31000+ hra வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை கீழ்கையொப்பமிட்டவருக்கு 20.01.2021 அனறு அல்லது அதற்கு முன்னதாக cruchennai@yahoo.co,in இணையதளத்தில் சமர்பிக்கலாம்.
இது லிஸ்டலயே இல்லையே.. விவசாயிளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரிலையன்ஸ் ரீடெய்ல்
பணி நியமன இடம், அத்தியாவசிய கல்வி தகுதி, அனுபவம் முதலியன குறித்த விவரங்கள் கவுன்சில் இணைதளமான ccrhindiaவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்காம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அந்த இணையதளம் செயல்படவில்லை.