சென்னை புழல் சிறையில் வேலை.. மாதம் 72,000 சம்பளம்.. 8 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாதம் ரூ. 72,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னை அருகே புழல் மத்திய சிறை உள்ளது. 2006 ஆம் ஆண்டு இந்த புழல் மத்திய சிறை திறக்கப்பட்டது. புழல் சிறையில் காவல் பணிகளை தவிர இதர சில பணிகளுக்கு நேரடி நியமனம் நடைபெறுகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது புழல் சிறையில் காலியாக இருக்கும் சமையலர், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டார். இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி.. எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள்: சமையலர், லாரி டிரைவர், நெசவு போதகர் என மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு பணியின் தன்மைக்கேற்ப தகுதிகள் மாறுபடும்.
கல்வித் தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சமையலர் பணிக்கு, சமையலர் பணியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நெசவு போதகர் பணிக்கு தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையினரால் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை சமையலர் பணியிடத்தை தவிர இதர இரு பணியிடங்களுக்கும் 18 - 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொருத்தவரை சமையலர் பணிக்கு ரூ.15,900 - 55,500 வரையும், டிரைவர், நெசவு பணியிடங்களுக்கு ரூ.19,500- 71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: இந்த பணியிடங்களுக்கு ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் 13.09.2024 மாலை 6 மணிக்குள் சென்றடைய வேண்டும். அதற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
சிறை கண்காணிப்பாளர்
மத்திய சிறை-1, புழல்
சென்னை - 66
தொலைபேசி எண்: 044-26590615.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பை படிக்க இந்த லிங்கை கிளிக் https://chennai.nic.in/applications-are-invited-from-eligible-candidates-for-the-following-posts-in-central-prison-1-puzhal-chennai-district/ செய்யவும்.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications