
மாதம் ரூ.50,000 முதல் ரூ.1.80 லட்சம் வரை சம்பளம்! அழைக்கும் மத்திய அரசு பணி! விண்ணப்பிப்பது எப்படி?
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலக்கரி நிறுவனத்தில் 1000க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.80 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ள இந்த பணிக்கு என்ஜினீயரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மத்திய அரசின் நிலக்கரித்துறையின் கட்டுப்பாட்டில் Coal India Limitedகீழ் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு Maharatna நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் நிலக்கரி தேவையில் 83 சதவீதத்தை இந்த நிறுவனம் தான் மேற்கொண்டு வருகிறது. இங்கு காலிபணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
மழை வேண்டும்.. முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்.. மறக்காமல் மூக்கில் முத்தம் வேறு!

மொத்த காலியிடம் எவ்வளவு?
இந்த நிறுவனத்தில் மைனிங், சிவில், எலக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேசன், சிஸ்டம் மற்றும் இடிபி பிரிவில் மொத்தம் 1,050 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் மைனிங் பிரிவி்ல 699 பேர், சிவில் பிரிவில் 160 பேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் பிரிவில் 124 பேர், சிஸ்டம் மற்றும் இடிபி பிரிவில் 67 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
இதில் மைனிங், சிவில், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேசன் பிரிவில் பணியாற்ற விரும்புவோர், பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினியரிங்) என சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேநேரத்தில் சிஸ்டம் மற்றும் இடிபி பணிக்கு கம்யூட்டர் பாடப்பிரிவில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினியரிங்) அல்லது எம்சிஏ படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு மதிப்பெண்களில் தளர்வு உண்டு.

வயது வரம்பு என்ன?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். வயதானது 31.05.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்டிச பிரிவினருக்கு 5 ஆண்டுகள், பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 ஆண்டுகள், பிடபிள்யூடி(ஓபிசி) பிரிவினருக்கு 13 ஆண்டுகள், பிடபிள்யூடி (எஸ்சி/எஸ்டி) பிரிவினருக்கு 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?
Management Trainees பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000ம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பத்தாரர்கள் GATE மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி செய்யப்படும். அதன்பிறகு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.coalindia.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் .விண்ணப்ப கட்டணமாக ரூ.1180 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூ, இஎஸ்எம் பிரிவினருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய ஜூலை 22ம் தேதி இறுதி நாளாகும். முறையான அறிவிப்பை காண https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_No._02-2022_for_recruitment.pdf கிளிக் செய்யவும். கூடுதல் விபரங்களை www.coalindia.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.