மத்திய அரசு நிறுவனத்தில்.. நல்ல சம்பளத்தில் கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மத்திய அரசு நிறுவனமான இஐஎல் எனப்படும் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம் இஐஎல் எனப்படும் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட். டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் ஹைட்ரோகார்பன் தொடங்கி நீர் மேலான்மை, உரம் வரை பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த இஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 75
பணி Management Trainees
பணி வாரியாக:
கெமிக்கல் - 6 பணியிடங்கள்
மெக்கானிக்கல் - 75 பணியிடங்கள்
சிவில் - 12 பணியிடங்கள்
எலக்டிரிக்கல் - 13 பணியிடங்கள்
இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் - 9 பணியிடங்கள்
சம்பளம்: ரூ 66 ஆயிரம் வரை வழங்கப்படும்
தகுதி: ஒவ்வொரு பணியிடத்திற்கும் சம்பந்தப்பட்ட பாடத்தில் 65% மதிப்பெண்கள் உடன் பிஇ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை - கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
அதிகபட்ச வயது வரம்பு: 25 வயதுடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளுக்கு, எஸ்சி & எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
கடைசி தேதி - மார்ச் 14, 2022
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குக் கட்டணம் ரூ 100. இதர பிரிவினருக்குக் கட்டணம் இல்லை
கூடுதல் தகவல்களுக்கு https://recruitment.eil.co.in/hrdnew/mt/Advertisement_GATE_2022.pdf
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க https://recruitment.eil.co.in/