பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்.. இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஏராளமான பணிகள்!
டெல்லி: பொறியியல் பட்டதாரிகள் இந்திய விமான நிலைய ஆணையத்தில் 68 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பர எண்.05/2020
மொத்த காலியிடங்கள்: 368
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மேலாளர் (Fire Services) - 11
பணி: மேலாளர் (Technical) - 02
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
வயதுவரம்பு: 30.11.2020 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Air Traffic Control) - 264
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Airport Operations) - 83
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Technical) - 08
ஊதியம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 30.11.2020 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பையர், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், இயற்பியல், கணிதம் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆவர்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் ஓட்டுநர் சோதனை மற்றும் குரல் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.170 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்பழகுநர் (Apprentices) கட்டணம் செலுத்த தேவை இல்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.aai.aero என்ற இணையதளத்தில் அறியலாம்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 15.12.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2021
மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள பிடிஎப்பில் அறியலாம்