For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஇ, பிடெக், எம்எஸ்சி, எம்சிஏ படிச்சிட்டு வேலை தேடுறீங்களா.. இ சேவை நிறுவனத்தில் லட்டு போல் வேலை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு இ சேவை மைய வேலைவாய்ப்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாப்ட்வேர் புரோகிராமர், புரோகிராமர் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்பதாக தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கையின்படி புரோகிராமர், சாப்ட்வேர் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் அட்மினிஸ்டிரேஷன் (OS), டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேஷன் (DB) ஆகிய பணிகளை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Job opportunities in Tamilnadu E Governance Agency

TNEGA Recruitent 2020 அறிவிப்பின்படி தேர்வும் நேர்காணலும் நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த பணிக்கு பிஇ/பிடெக் /பிசிஏ / எம்சிஏ/ எம்எஸ்சி ஆகியவை கல்வித் தகுதியாகும். இந்த பணிக்கு வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை tnega.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

கவர்மென்ட் வேலை தேடிதேடி கண்கள் பூத்து விட்டதா?.. சரி விடுங்க.. நல்ல சம்பளத்தில் இதை பாருங்க!கவர்மென்ட் வேலை தேடிதேடி கண்கள் பூத்து விட்டதா?.. சரி விடுங்க.. நல்ல சம்பளத்தில் இதை பாருங்க!

புரோகிராமர் பணிக்கு பிஇ/பிடெக் /பிசிஏ / எம்சிஏ/ எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அது போல் சாப்ட்வேர் புரோகிராமர் பணிக்கு Information Technology or Computer Science பாடப்பிரிவில் பிஇ/பிடெக் /பிசிஏ / எம்சிஏ/ எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 முதல் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

OS and DB Administration பணிக்கு பிடெக் அல்லது எம்சிஏ பட்டம் பெற்று 2 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Job opportunities are commenced for Tamilnadu E Governance Agency as Programmer, Software Programmer etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X