• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுவை மின்வாரியத்தில் ஜேஇ பணி.. ரூ.33 ஆயிரம் சம்பளம்.. மொத்தம் 42 வேகன்சி.. ஆன்லைனில் அப்ளை செய்ங்க

|

புதுவை: புதுவை மின்சாரத் துறையில் காலியாக உள்ள உதவி பொறியாளர் (Junior Engineer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 42 காலியிடங்கள் நிரப்ப விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

Job vacancies for the post of Junior Engineer in Puducherry

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜனவரி 4ஆம் தேதி தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த புதுவை மாவட்ட மின்சாரத் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் புதுவையில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ 33 ஆயிரம் மாத ஊதியமாக வழங்கப்படும்.

ரூ 10 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை ஊதியம்.. டிச. 18 இல் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றிடுங்கள்!

இந்த பணிக்கு டிப்ளமோ அல்லது பிஇ படித்து 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு recruitment.py.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். வயது வரம்பு 18 முதல் 30 வரை இருத்தல் வேண்டும்.

 
 
 
English summary
42 vacancies for the post of Junior Engineer in Puducherry Electricity Board.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X