For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே துறையில்.. தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் வேலை.. டிசம்பர் 15ம் தேதி ஆன்லைன் தேர்வு!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய ரயில்வே துறையில் என்டிபிசி எனப்படும் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே துறையின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) இந்த தேர்வு தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி non-technical popular categories -NTPC என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Jobs In Railway: Non-technical popular categories exam will be held on Dec 15

இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. வரும் டிசம்பர் 15ம் தேதி காலி பணியிடங்களுக்காக தேர்வுகள் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டது. கடந்த 2019ம் வருடம் மார்ச் 1-31 வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த நிலையில் ஒன்றரை வருடத்திற்கு பிறகு இப்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 640 காலி பணியிடங்களை நிரம்ப இந்த தேர்வு நடக்கிறது. இதில் 35277 பணியிடங்கள் பாராமெடிக்கல் பணியிடங்களுக்காக நடக்கிறது.

மத்திய அரசு வேலைக்கான பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை.. சர்ச்சை பற்றி நிதி அமைச்சகம் விளக்கம்மத்திய அரசு வேலைக்கான பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை.. சர்ச்சை பற்றி நிதி அமைச்சகம் விளக்கம்

இந்த பணியிடங்களுக்காக 2 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில் இவர்களுக்கான தேர்வு டிசம்பர் 15ம் தேதி நடக்கிறது. முதலில் இந்த தேர்வு கடந்த ஜூன் மாறும் செப்டம்பர் மாதம் நடப்பதாக இருந்தது.ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக தேர்வு தள்ளி போன நிலையில் தற்போது புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Jobs In Railway: Non-technical popular categories exam will be held on Dec 15 through online.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X