For Daily Alerts
Just In
சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. ஆபிஸர், எக்ஸிக்யூட்டிவ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு
சென்னை: சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. சவுத் இந்தியன் வங்கியில் ஆபிஸர்கள் மற்றும் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கடைசி தேதி ஜனவரி 30 ஆகும். விண்ணப்பதாரர்கள் இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவோர் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த பணிகளுக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து டிகிரி அல்லது பிஜி டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். www.southindianbank.com என்ற இணையதளத்தை சரி பார்த்து கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ800 வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.