• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ.62000 சம்பளத்தில் வேலை.. விண்ணப்பம் உள்ளே!

|

சென்னை: தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை பட்டதாரிகளுக்கு வேலை காத்துக்கொண்டிருக்கிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள 22ம் தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Jobs in Tamil Nadu Cements Corporation with a salary of Rs.62000

வேலை தரும் நிறுவனம்: தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

மொத்த பணியிடங்கள்: 19

வேலை: அரசு வேலை

பணியின் பெயர்: பெர்சனல் அசிஸ்டண்ட் - 04

ஊதியம்: மாதம் ரூ.19500-ரூ.62,000

கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சியுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருத்தல் அவசியம்

பணியின் பெயர் : ஜுனியர் அசிஸ்டண்ட் - 10

ஊதியம்: மாதம் ரூ.19500-ரூ.62000

கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருப்பதோடு கணினி அறிவியலில் 6 மாத டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: டைம் கீப்பர் - 02

ஊதியம்: மாதம் ரூ.5670-102-7710

கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் தட்டச்சுத் திறன் பெற்றிருப்பது கட்டாயம்.

பணி: டிரைவர் - 03

சம்பளம்: மாதம் ரூ.5680- 102-7720

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tancem.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை சுயசான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 22.01.2021

அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager (Mktg./Admn.)

Tamil Nadu Cements Corporation Limited,

LLA Buildings, 2nd Floor, No.735,

Anna Salai, Chennai 600 002.

மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்ய இந்த செய்தியில் : பிடிஎப் பைலை பாருங்கள்.

 
 
 
English summary
Jobs are waiting for graduates working in Tamil Nadu Cements Corporation. Eligible and interested candidates are requested to apply by post by the 22nd.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X